ஓட்டுக்களை பெறுவதற்காக பொய் சொல்லும் கட்சி ஆம் ஆத்மி – அமித்ஷா

டில்லி மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக பொய் சொல்லும் கட்சி ஆம் ஆத்மி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.

டில்லியில் 70 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவற்றுக்கான தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. முடிவுகள் பிப்ரவரி 8ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் நரேலா சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:

கெஜ்ரிவாலும், அவரது கட்சியும் டில்லியில் வசிக்கும் பூர்வாஞ்சல் மக்களை தங்கள் கருத்துகளால் அவமதித்தனர். ஆம் ஆத்மியின் கண்காணிப்பில் தலைநகரில் தவறான நிர்வாகம் நடக்கிறது.

டில்லியில் 10 ஆண்டுள் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஊழலில் ஈடுபட்ட அதே வேளையில் ஓட்டுக்களைப் பெறுவதற்காக பொய்களைப் பரப்புகிறது. ஆம் ஆத்மி என்றால் சட்டவிரோத வருமானம் ஈட்டும் கட்சி என்று பொருள்.

பா.ஜ., ஆட்சிக்கு வரும் பிப்ரவரி 8ம் தேதி அன்று ஆம் ஆத்மியின் தவறான நிர்வாகம் முடிவுக்கு வரும். கெஜ்ரிவால் உங்கள் அரசாங்கம் விரைவில் வெளியேறப் போகிறது. பா.ஜ.,தலைமைக்கு வருகிறது.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...