:“மஹாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்தி; இங்கு இருக்கும் அனைவரும் இதை கற்றுக் கொண்டு பேச வேண்டும்,” என, அந்த மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உறுதிபட தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இங்கு சமீபத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி, ‘மும்பைக்கு ஒரு மொழி இல்லை. அதற்கு பல மொழிகள் உள்ளன. சில பகுதிகளுக்கு அவற்றின் சொந்த மொழி உண்டு.
காட்கோபரின் மொழி குஜராத்தி. கிர்காமில் ஹிந்தி பேசுபவர்கள் குறைவாகவும், மராத்தி பேசுபவர்கள் அதிகமாகவும் இருப்பர். எனவே, மும்பைக்கு வருபவர்கள் மராத்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவசியம் இல்லை’ என, தெரிவித்திருந்தார்.
இதற்கு, மஹாராஷ்டிராவின் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். சிவசேனா உத்தவ் பிரிவின் ராஜ்யசபா எம்.பி.,யான சஞ்சய் ராவத், ‘மராத்தி நம் மாநில மொழி. ஜோஷியின் கருத்துகள், மஹாராஷ்டிராவையும், இங்குள்ள மக்களையும் அவமதிக்கும் வகையில் உள்ளன.
‘அவரின் கருத்துகளை கண்டித்து, மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என, வலியுறுத்தினார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மாநில அரசு விளக்க வேண்டும் என, சிவசேனா உத்தவ் பிரிவு எம்.எல்.ஏ.,க்கள் நேற்று சட்டசபையில் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்து முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பேசியதாவது:
சுரேஷ் பையாஜி ஜோஷி கூறியது குறித்து நான் எதுவும் கேள்விப்படவில்லை. இருப்பினும், மஹாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்தி தான் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அனைவரும் மராத்தியை கற்றுக்கொள்ள வேண்டும், அந்த மொழியைப் பேச வேண்டும். என் தலைமையிலான அரசு, பிற மொழிகளையும் மதிக்கிறது. நீங்கள் உங்கள் சொந்த மொழியை நேசித்து மதிக்கிறீர்கள் என்றால், பிற மொழிகளையும் அவ்வாறே செய்ய வேண்டும். இந்த கருத்தில் பையாஜி என்னுடன் உடன்படுவார் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |