மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ப.ஜ.க மூத்த தலைவர் தேவேந்திர பட்னவீஸ் இன்று பதவி ஏற்கிறார்

மஹாராஷ்டிராவின் புதிய முதல்வராக, பா.ஜ., மூத்த தலைவர் தேவேந்திர பட்னவிஸ் இன்று பதவியேற்கிறார். முதல்வர் பதவி யாருக்கு என்பதில், 10 நாட்களுக்கு மேல் நீடித்த இழுபறி ஓய்ந்தது.

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., – சிவசேனா – அஜித் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, ‘மஹாயுதி’ கூட்டணி, மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 230ஐ கைப்பற்றி வரலாறு படைத்தது. அதில், 132 தொகுதிகளை வென்ற பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா 57 இடங்களையும், அஜித்தின் தேசியவாத காங்., 41 இடங்களையும் பிடித்தன.

இந்நிலையில், மும்பையில் நேற்று பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. கட்சியின் மேலிட பார்வையாளர்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பங்கேற்றனர். சட்டசபைக்கான பா.ஜ., தலைவராக தேவேந்திர பட்னவிஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஷிண்டே, அஜித் ஆகியோருடன் ராஜ்பவன் சென்றார்.

கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தையும், கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்தையும் கொடுத்தார். இன்று மாலை 5:30 மணிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதாக கவர்னர் தெரிவித்தார்.

பட்னவிஸ் முதல்வராக பதவியேற்பது இது மூன்றாவது முறை. உடன், அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்கிறார். ஷிண்டேவும் துணை முதல்வர் ஆவாரா என்பது உடனே தெரியவில்லை.

விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாருடன் இணைந்து கூட்டணி அரசை வழிநடத்துவேன். ஒற்றுமையாக இருந்து, மக்களுக்காக பணியாற்றுவோம். துணை முதல்வர்களாக இருவர் பதவியேற்பர். அமைச்சரவை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. -தேவேந்திர பட்நவிஸ் 

இரண்டரை ஆண்டுகளுக்கு முன், முதல்வராக என் பெயரை தேவேந்திர பட்னவிஸ் முன்மொழிந்தார். அதற்கு நன்றியாக, இந்த முறை அவரது பெயரை நான் முன்மொழிந்தேன். பட்னவிசுக்கு வாழ்த்துகள். – ஏக்நாத் ஷிண்டே

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்ச ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி -பிரதமர் மோடி சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுப் பொருட்கள் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...