”கடந்த பத்து ஆண்டுகளில் விமானத்துறை பெரும் முன்னேற்றம் அடைந்து உள்ளது,” என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.
பெங்களூரு, ஹெச்.ஏ.,எல்.,லில் உள்ள இந்திய விமான படையின், விண்வெளி மருத்துவ நிறுவனத்தை நேற்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். இவர் முன்னிலையில், ‘ஆல்பா டோகல்’ எனும் தனியார் நிறுவனம் தயாரித்த எல்.சி.ஏ., – எம்.கே., 1ஏ எனும் போர் விமானம் ஹெச்.ஏ.எல்., வசம் ஒப்படைக்கப்பட்டது. விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது:
உலகம் முழுதும் உள்ள பல தனியார் நிறுவனங்கள் விண்வெளி ஆராய்ச்சியில் இறங்கி உள்ளன. விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
எதிர்காலத்தில் விண்வெளித்துறை மருத்துவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நம் நாட்டின் விமானத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் விமான சந்தையில், நம் நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ல் இருந்து 159 ஆக உயர்ந்து உள்ளது. எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சி அடையும்.
விண்வெளியில், வீரர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு தீர்வு காண்பதை விண்வெளி மருத்துவம் முதன்மையாக கொண்டு உள்ளது. நம் நாட்டில் தயாரிக்கப்படும் அதிநவீன போர் வீமானமான ஏ.எம்.சி.ஏ.,வின் வடிவமைப்பு, மேம்படுத்துவது தொடர்பாக விண்வெளி மருத்துவ நிறுவனம் ஆலோசனை வழங்குவது பெருமையாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |