”இனி வரும் காலங்களில் போர் முறைகள் என்பது கணிக்க முடியாதபடியும், ஆக்ரோஷமாகவும் இருக்கும்”, என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ராணுவ தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்திய ராணுவத்தின் நவீன போர் யுத்திகள் குறித்து நாம் பேசும்போது, வரும் நாட்களில், போர் என்பது இன்னும் ஆக்ரோஷமாகவும், கணிக்க முடியாததாகவும் இருக்கும். நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் போது, எதிர்காலத்தின் போர் முறைகள் மாறக்கூடும்.
இதனால், இந்த பல்முனை சவால்களை எதிர்கொள்ள ராணுவம் தயாராக இருக்க வேண்டும். மேலும், முழுமையான திறன் மேம்பாடு மற்றும் சீர்திருத்தங்கள் இரண்டிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |