இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி, ரூ.21,000 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
மத்திய பிரதேச மாநிலம் மோவ் கண்டோன்மென்ட்டில் உள்ள பழமை வாய்ந்த ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் விழா நடந்தது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:
ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது, ரூ.21,000 கோடியை தாண்டிவிட்டது. பத்தாண்டுகளுக்கு முன்னர் ஏற்றுமதி ரூ.2000 கோடி என்ற நிலையிலே இருந்தது. 2029ம் ஆண்டுக்குள் ரூ.50,000 கோடி ஏற்றுமதியை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் எதிர்கால சவால்களுக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெறுவது காலத்தின் தேவை.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |