சமைக்கல்வி என்பது நமது உரிமை – அண்ணாமலை

சம கல்வி என்பது நமது உரிமை,” என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக பா.ஜ., தி.மு.க., இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. ஹிந்தியை திணிப்பதாக மாநில அமைச்சர்கள் தெரிவிக்க, அதனை மத்திய அமைச்சர்கள் மறுத்துள்ளனர். இதனை பா.ஜ.,வினரும் உறுதி செய்கின்றனர். மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர்.>இந்நிலையில், தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஸ் ‘தமிழகத்தின் கல்வி அமைப்பை மாற்ற வேண்டாம். இருமொழிக் கொள்கையைத் தான் தமிழகம் விரும்புகிறது.செயல்படும் தமிழகத்தின் கல்வி அமைப்பை மாற்ற வேண்டாம். தேசிய கல்விக் கொள்கையில் தமிழகத்தின் நிலைப்பாட்டை மொழி பிரச்னையை விமர்சிப்பது தவறாக வழி நடத்துவது என்பது மட்டுமல்ல. உண்மையான பிரச்னை என்ன என்பதையே தள்ளி வைப்பதாகிறது,’ என நீண்ட விளக்கம் அளித்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சில கருத்துகளை தெரிவித்தார். ஆனால், அவர் எங்கு தவறு செய்கிறார் என்றால்

*தி.மு.க., அரசு தனது தவறுகளை மறைக்க அமைத்த ஒரு பிரிவு பிப்.,2025ல் தமிழகத்தில் 1835 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இருப்பதாகக் கூறியது. இன்று, கல்வி அமைச்சர் அதை 1,635 சி.பி.எஸ்.இ., பள்ளிகளாகக் குறைத்து உள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் 1.09 கோடி பேர் படிப்பதாக தெரிவித்து உள்ளார். ஆனால், பள்ளி கல்வித்துறை சார்பில் கொள்கை குறிப்புகளின் கீழ் வெளியிடப்பட்ட தகவலில், 2023- 24 ம் கல்வியாண்டில் 56 லட்சம் மாணவர்கள், தனியார் பள்ளிகளில் (சி.பி.எஸ்.இ.,, ஐ.சி.எஸ்.இ., மெட்ரிக் மற்றும் ஸ்டேட் போர்டு) படிக்கின்றனர். மாநில அரசின் பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் 53 லட்சம் பேர் படிக்கின்றனர்.

*மெட்ரிக் பள்ளிகளுக்கு என தனித்துவமான பாடத்திட்டம் உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் தான் தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன.
>*பள்ளி கல்வித்துறை அமைச்சர் தனக்கு வசதியாக, தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளை மாநில பாடத்திட்ட பள்ளிகளுடன் இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் 4,498 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 30 லட்சம் பேர் படித்து வருகின்றனர். இந்த தனியார் மெட்ரிக் பள்ளிகள் 8 ம் வகுப்பு வரை மும்மொழி பாடத்திட்டத்தை அனுமதிக்கின்றன.

*15.2 லட்சம் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களும், மெட்ரிக் உள்ளிட்ட பள்ளிகளில் படிக்கும் 45 லட்சம் மாணவர்களும் 3 மொழிகளை படிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் 50 சதவீத மாணவர்களுக்கு 3 மொழிகளை படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. எஞ்சிய 50 சதவீத மாணவர்கள் இரு மொழிகளை படிக்கின்றனர். ஏன் இந்த பாசாங்குத்தனம்?
*தி.மு.க.,வினர் நடத்தும் மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் கட்டாயப்பாடம் அல்ல. விருப்பப்பாடம் தான். ஏன் இந்த இரட்டை வேடம்.

*மாநில பாடத்திட்டம் பல ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்டு, சோதிக்கப்பட்டு வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டு இருந்தால், தி.மு.க., எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் குழந்தைகள் ஏன் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.

*தி.மு.க., அரசியலைப் புரிந்து கொண்டு அதற்கு அப்பால் எழ வேண்டும். இது 1960 கள் அல்ல. மாறி வரும் காலங்களுக்கு ஏற்ப நமது கொள்கைகளும் உருவாக வேண்டும்.
*உங்கள் குடும்பத்திற்கு என ஒரு கொள்கையையும், ஏழைகளுக்கு என இன்னொரு கொள்கையையும் நீங்கள் வைத்திருக்க முடியாது. உங்கள் பாசாங்கு தனத்தை தொடர்ந்து நாங்கள் அம்பலப்படுத்துவோம். சமகல்வி என்பது நமது உரிமை. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...