தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி அமைச்சர்

‘புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன்’ என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்மேந்திர பிரதான் நிருபர்கள் சந்திப்பில், ‘புதிய கல்விக்கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்க வேண்டும் என்பது விதி. அனைத்து மாநிலங்களும் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஏன் தமிழக அரசு மட்டும் ஏற்க மறுக்கிறது’ என கேள்வி எழுப்பினார்.

இதற்கு, ‘மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்திற்கு நிதி கிடையாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்’ என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மத்திய அமைச்சர் கூறியதை கண்டித்து தி.மு.க., போராட்டமும் அறிவித்துள்ளது.

இது குறித்து இன்று (பிப்.,17) தர்மேந்திர பிரதான் அளித்த பேட்டி: புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன். தமிழகத்தின் மீது ஹிந்தி மொழியை திணிக்கவில்லை. மும்மொழி கொள்கையில் ஹிந்தி கட்டாயம் அல்ல. பிற இந்திய மொழிகளாக இருக்கலாம்.

தமிழ், ஆங்கிலம் தவிர 3வது ஆக இந்திய மொழி ஒன்றை கற்கக் கூறுகிறோமே தவிர, ஹிந்தியை கட்டாயம் கற்க வேண்டும் என கூறவில்லை. புதிய கல்விக் கொள்கை தாய் மொழிக்கு முக்கியத்துவம் தருகிறது. தமிழ் மொழி பழமையானது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பன்மொழி அம்சத்தை கற்பதால் என்ன தவறு? தமிழகத்தில் உள்ள சிலர் இதில் அரசியல் செய்கின்றனர்.

ஹிந்தியை திணிக்கவில்லை, ஆனால் புதிய கல்விக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் சிலர் அரசியல் செய்கின்றனர். புதிய கல்விக் கொள்கை பிரதமரின் கனவு திட்டம். இதனை செயல் படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...