மொழியை வைத்து நாட்டை பிரிக்கும் அரசியல் கட்சிகள் – அண்ணாமலை அண்ணாமலை

‘சில அரசியல் கட்சிகள் இன்னும் நம் நாட்டை மொழியின் அடிப்படையில் பிரிக்க விரும்புகின்றன’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்றுள்ளார். அவர், பிரயாக்ராஜில் நிருபர்கள் சந்திப்பில், தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பது தொடர்பாக அண்ணாமலை கடுமையாக சாடி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: சில அரசியல் கட்சிகள் இன்னும் நம் நாட்டை மொழியின் அடிப்படையில் பிரிக்க விரும்புகின்றன. தாய்மொழி அனைவருக்கும் முக்கியம்.

10க்கும் மேற்பட்ட மொழிகளை கற்றுக்கொண்ட பிறகும், மகாகவி பாரதி தமிழை சிறந்த மொழி என்று அழைத்தார். எனவே மக்கள் அதிக மொழிகளைப் படிக்க வேண்டும்.

தேசிய கல்வி கொள்கை ஒரு இந்திய மொழியைப் படிப்பதை வலியுறுத்துகிறது. அது எந்த மொழியாகவும் இருக்கலாம். தமிழகத்தில், மாணவர்கள் தங்கள் விரும்பும் மொழியை படிக்கலாம். அரசியல் கட்சிகள் தேவையில்லாமல் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நர ...

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தால் தி.மு.க., ஆட்சி என்பதே இருக்காது: நயினார் நாகேந்திரன் ஆரூடம் “வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி விட்டால், இனி ...

நாட்டின் பாரம்பரியத்தை பிரதிப ...

நாட்டின்  பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சேனல் தூர்தர்ஷன் – மத்திய இணை அமைச்சர் ''நாட்டின் பொருளாதாரத்தில், படைப்பு பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது,'' என, ...

போதை பொருள் விற்பனையில் தமிழகம ...

போதை பொருள் விற்பனையில்  தமிழகம் முதலிடம் – எ ச் ராஜா தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனையாகிறது. கஞ்சா மூடைகள் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன்ட்ரோல் – நயினார் நாகேந்திரன் ''2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமு ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...