அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு சொந்தமான ட்ரூத் சோஷியல் மீடியாவில் பிரதமர் மோடி இணைந்தார்.
அமெரிக்க தொகுப்பாளர் லெக்ஸ் பிரிட்மேனுடன், பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை 3 மணி நேரம் கலந்துரையாடினார். அப்போது, ‘டிரம்ப் துணிச்சலானவர்; சுயமாக முடிவெடுப்பவர்’ என்று பிரதமர் புகழாரம் சூட்டினார். இந்த வீடியோவை டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடக கணக்கில் பகிர்ந்தார். இது குறித்து ஆங்கில மீடியாக்களில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்பிற்கு சொந்தமான ட்ரூத் சோஷியல் மீடியாவில் பிரதமர் மோடி இணைந்தார். தனது முதல் பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வரவிருக்கும் காலங்களில் இத்தளத்தில் ஆக்கபூர்வ உரையாடல்களில் ஈடுபட எதிர்பார்ப்புடன் உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது கலந்துரையாடல் வீடியோவை பகிர்ந்த டிரம்புக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘எனது நண்பர் அதிபர் டிரம்ப்புக்கு நன்றி. எனது வாழ்க்கைப் பயணம், உலகளாவிய பிரச்னைகள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |