அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் செய்த செயல்கள் – பிரதமர் மோடி

காங்கிரஸ் ஆட்சியின்போது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர் ஆகியோர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர் என்று பிரதமர் நரேந்திரமோடி விமர்சனம் செய்துள்ளார்.

ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள மகாராஜா அக்ராசென் விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஹிசார்-அயோத்தியா இடையே முதல் வணிக விமான சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். விமான நிலையத்துக்கான புதிய முனைய கட்டடத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தை அழிக்கும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறது. அம்பேத்கர் சம உரிமையை கொண்டு வர விரும்பினார். ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த நாட்டில் வாக்கு வங்கி எனும் வைரஸை பரப்பி விட்டது. காங்கிரஸ் கட்சியானது தாழ்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றி விட்டது. அதிகாரத்தை பெறுவதற்கான ஆயுதமாக பயன்படுத்துவதற்காக அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் மத ரீதியாக மாற்றி விட்டது. வாக்கு வங்கி எனும் வைரஸை பரப்பி உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியின்போது, கட்சித் தலைவர்களின் நீச்சல் குளங்களுக்குத்தான் தண்ணீர் சென்றது. குடிநீர் குழாய்கள் மூலம் கிராமங்களைச் சென்றடையவில்லை. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆனபோதும் கூட கிராமங்களில் உள்ள 16 சதவிகித குடியிருப்புகள்தான் குடிநீரைப் பெறுகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது தாழ்தப்பட்டோர், பழங்குடியினர், இதரப் பிற்படுத்தப்பட்டோர்கள்தான். சமூகத்தில் பின்தங்கியோரின் நலனைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் கவலைப்படுவதாக இருந்தால், இப்போது ஒவ்வொரு தெருவிலும் பேசும் அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது தாழ்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் வீடுகளுக்கு குடிநீர் கொண்டு செல்வதை உறுதி செய்திருக்க வேண்டும்.

அவர்கள் அம்பேத்கருக்கு என்னவெல்லாம் செய்தனர் என்பதை நாம் மறக்க முடியாது. அம்பேத்கர் உயிரோடு இருந்தபோது தேர்தல்களில் இரண்டு முறை அவரை தோல்வியடைய செய்து அவரை காங்கிரஸ் அவமானப்படுத்தியது. அரசியலில் இருந்தே அவரை வெளியேற்ற ஒரு சதித்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அம்பேத்கர் உயிரோடு இல்லாத சூழலில், அவரது நினைவுகளை அழிப்பதற்கு கூட காங்கிரஸ் முயற்சி செய்தது. அவருடைய யோசனைகளைக் கூட முடிவுக்கு கொண்டு வர அவர்கள் விரும்பினர். பாஜக தலைமையிலான மத்திய அரசு ஒருபுறம் இணைப்பை மேற்கொண்டு வருகிறது. இன்னொரு புறம் ஏழைகளின் நலனுக்கான சமூக நீதியை உறுதி செய்கிறது. இதுதான் அம்பேத்கரின் கனவாக இருந்தது. நமது அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள், இந்த தேசத்துக்காக தியாகம் செய்தவர்கள் நமது நாட்டுக்கான விருப்பமாக கொண்டிருந்தனர். இதுதான் அவர்களின் கனவாக இருந்தது.

இடைநிறுத்தம் இல்லாத வளர்ச்சி, முன்னேற்றம் என்பதுதான் பாஜகவின் மந்திரமாகும். ஏழைகள், பழங்குடியினர், பெண்கள் ஆகியோரின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவதே எங்கள் நோக்கம். நமது அரசின் ஒவ்வொரு முடிவு, கொள்கை என்பது அம்பேத்கருக்கு கடமைப் பட்டிருக்கிறது. அம்பேத்கர், சவுத்ரி சரண் சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா கொடுக்கப்படவில்லை என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

கர்நாடாவில் உள்ள காங்கிரஸ் அரசு மத ரீதியிலான இட ஒதுக்கீடை வழங்குகிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பின்தங்கியோரின் உரிமைகளைப் பறிக்கிறது. மத ரீதியிலான இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கப்படுவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் தடை இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் சொல்லி இருக்கிறார்,”என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; தே.ஜ., ...

''தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் ப ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை பார்வைக்கு அப்பால் இருக்கும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : இன்று மோடி வழங்குகிறார் பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் : 5 ஆண்டுகளில் இது முதல்முறை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா செல்ல உள்ளதாக ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வ ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வதந்தி ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத், சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்ட ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்டினார் பெருந்தகை என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...