இந்தியாவின் அதிரடி நடவடிக்கை ; வறண்டு போன செனாப் நதி

சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்த நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானில் செனாப் நதி வறண்டு காட்சியளிக்கும் செயற்கைக்கோள் படம் வெளியாகி உள்ளது.

நம் அண்டை நாடான திபெத் மற்றும் இமயமலை அடிவாரத்தில் உள்ள ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து உருவாகும் ஆறு நதிகள், சிந்து நதி தொகுப்பாக கருதப்படுகிறது. இவற்றில், கிழக்கே பாயும் மூன்று நதிகள் இந்தியாவுக்கும், மேற்கு நோக்கி பாயும் சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்று நதிகள் பாகிஸ்தானுக்கும் ஒப்பந்தப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நதிகளில் பாயும் தண்ணீரில் குறைந்த அளவு மட்டுமே இந்தியா பயன்படுத்த முடியும். பெரிய அளவில் அணைகளைக் கட்டி தடுத்து நிறுத்த கூடாது என்பது சிந்து நதிநீர் ஒப்பந்தம். இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே உறவில் முறிவு ஏற்பட்டது.

இந்தியாவில் இடைவிடாமல் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா முறித்துக் கொண்டுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை, பாகிஸ்தானில் குறைந்தது இரண்டு மாநிலங்களில் குடிநீர் மற்றும் வேளாண்மைக்கு தண்ணீர் கிடைக்காத நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது, இந்தியாவின் அதிரடி நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானில் செனாப் நதி வறண்டு காட்சியளிக்கும் செயற்கைக்கோள் படம் வெளியாகி உள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக பாய்ந்த தண்ணீர், தாக்குதலுக்குப் பின் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையால் வறண்ட நதியின் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளன.

‘இந்தியாவிடம் சீண்டி பார்த்த பாகிஸ்தானுக்கு இதுவே தக்க பதிலடி’ என சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...