பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி கடுமையாக இருக்கும் – பிரதமர் மோடி

” பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், பதிலடி நிச்சயம் கடுமையாக இருக்கும்,” என அமெரிக்க துணை அதிபர் வான்சிடம், பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த நான்கு நாட்களாக மோதல் நிலவியது. பாகிஸ்தான் அனுப்பிய டுரோன் மற்றும் ஏவுகணைகளை இந்தியா தாக்குதல் நடத்தி அழித்தது. மேலும், அந்நாட்டின் விமான தளங்கள் மீதும் இந்தியா நடத்திய தாக்குதல் காரணமாக, நிலைகுலைந்து போன பாகிஸ்தான், அமெரிக்காவிடம் முறையிட்டது.போர் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டியது. அதன்படி நேற்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலானதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் நபராக உலகிற்கு அறிவித்தார். அமெரிக்காவின் தீவிர முயற்சியால் இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக அந்நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது. அப்போது பிரதமர் மோடி, ‘ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், இந்தியா நிச்சயம் கடுமையான பதிலடி கொடுக்கும். இந்தியாவின் 26 நகரங்கள் மீது பாகிஸ்தான் குறிவைத்தது. இதற்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுத்தது என தெரிவித்தார்’ என அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...