அக்சார்தம் கோவிலில் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்- உஷா தம்பதி வழிபாடு

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மனைவி உஷாவுடன் இன்று (ஏப்ரல் 21) டில்லி வந்தடைந்தார். அக்சார்தம் கோவிலில் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்- உஷா தம்பதி வழிபாடு செய்தனர்.

அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ் மற்றும் அவர் மனைவி உஷா ஆகியோர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்தனர். துணை அதிபர் வான்ஸை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார். டில்லியில் வான்ஸ் குடும்பத்தினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், அவரது மனைவி உஷா, குழந்தைகள், டில்லி அக்சார்தம் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். துணை அதிபர் வான்ஸ் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். அப்போது இரு தரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசனை செய்யப்பட உள்ளது.

டில்லி, ஜெய்ப்பூர், ஆக்ரா உள்ளிட்ட நகரங்களுக்கும் வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதற்கு முன்னர், ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் துணை அதிபராக இருந்த ஜோ பைடன் 2013ம் ஆண்டு டில்லி வந்து இருந்தார்.

இதன் பிறகு, அந்நாட்டின் துணை அதிபர் தற்போது தான் டில்லி வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஃபிளைதுபாய் கடத்தல் கவர் ஸ்டோரà ...

ஃபிளைதுபாய் கடத்தல் கவர் ஸ்டோரி ஃபிளைதுபாய் காக்பிட் தாக்குதலில் இஸ்ரேல்-அமெரிக்கா ஆக்ரோஷம்; வளைகுடா நாடுகள் ...

மக்கள் சேவையில் இருந்து ஒருபோதà ...

மக்கள் சேவையில் இருந்து ஒருபோதும் விலக மாட்டோம்: பிரதமர் மோடி உறுதி நாட்டு மக்களின் சேவையே பாரதிய ஜனதா கட்சியின் உயிர்நாடியாக ...

ஜெம் வீரமணி வழக்கில் பாரபட்சமறà ...

ஜெம் வீரமணி வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை தேவை: வானதி சீனிவாசன் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் வீரமணி தொடர்பான போக்சோவழக்கில் எந்தவித ...

வெளிநாட்டு நிதி இந்திய சட்டங்கà ...

வெளிநாட்டு நிதி இந்திய சட்டங்களின் படி செலவிடப்பட வேண்டும் என்ஜிஓக்களின் (NGOs) எஃப்சிஆர்ஏ (FCRA) சான்றிதழ்களின் செல்லுபடியாகும் தன்மையைச்சரிபார்க்கவும், ...

இந்திய மண்ணில் முதன்முறையாகப் à ...

இந்திய மண்ணில் முதன்முறையாகப் பறந்த ஜப்பானிய போர் விமானங்கள்! இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு ...

கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர௠...

கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு (CSR): இது பணப் பிரச்சினையா அல்லது இடப் பிரச்சினையா? இந்தியாவில் இவ்வளவு அதிகமான கார்ப்பரேட் பணம் சமூகப்பொறுப்புணர்வு (CSR) ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...