போர் என்பது விலையுயர்ந்த ஒன்று

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இந்தியகாஸ்ட் அக்கவுன்டன்ட்ஸ் நிறுவனத்தின் வைரவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜெனரல் நரவனே, “உண்மையில் ஒருபோர் வெடிக்கும்போது,​​மரணமும் அழிவும் ஏற்படுகிறது. போர் ஏற்படும் போது பொருளாதார இழப்பும் பெரிதாக இருக்கும். மறுகட்டமைப்பு செலவுகள், இழந்த உபகரணங்களின் செலவுகள் எனப் பெரியசெலவு இருக்கும்.

போர் என்பது விலையுயர்ந்த ஒன்று.. போர் வாரக்கணக்கில் அல்லது மாதக் கணக்கில் நீடித்தால் கற்பனை செய்யாத அளவுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும்.. போரின் முடிவில் நாம் அனைத்தையும் மீட்டெடுக்க வேண்டியிருக்கும்.. அப்போதுதான் சிறு சிறு இழப்புகள் சேர்ந்து எவ்வளவு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது நமக்குத்தெரியவரும்.

போரை நிறுத்துவது நல்லதா கெட்டதா என்று இங்குப்பலர் விவாதித்து வருகிறார்கள். நீங்கள் கடந்த காலங்களில் நடந்தவை மற்றும் புள்ளி விவரங்களை எடுத்து பார்த்தால் இழப்புகள் மிகப்பெரியளவில் அல்லது சமாளிக்க முடியாத அளவுக்கு மாறத் தொடங்குவதற்கு முன்பு போரை நிறுத்துவதே புத்திசாலித்தனமானது. பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது மட்டுமின்றி, அங்குள்ள விமானத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தமுடியும் என்பதை இந்தியா காட்டியுள்ளோம். இதன் மூலம் மோசமான பொருளாதார இழப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்தோம். இதுவே அவர்களை மோதல் நிறுத்தத்திற்கு தள்ளியுள்ளது.

போர்என்பது சாதாரணமானது இல்லை.. அதில் ஏகப்பட்ட உயிரிழப்புகள் ஏற்படும். குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழப்பார்கள்.. எல்லை பகுதிகளில் கண்மூடித்தனமாக நடத்தப்படும் ஷெல்தாக்குதல்களில் குழந்தைகள்கூட கொல்லப்படுவார்கள்.. அந்த இழப்புகளை உண்மையில் யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மிகப்பெரியளவில் மக்கள் தாங்கள் தங்கியிருந்த இடங்களை விட்டு வெளியேற நேரிடும். பெரியவர்கள் மற்றும் குழந்தைகளிடையே மனரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தும்.

குறிப்பாக எல்லைப் பகுதிகளில் உள்ள குழந்தைகள், தினசரி ஷெல் தாக்குதலைக் கண்டவர்கள், ஒவ்வொரு இரவும் எங்குபாதுகாப்பு இருக்குமோ எனத் தெரியாமல் ஓடியவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் மன ரீதியாகப் பாதிக்கப்படுவார்கள். அந்த அதிர்ச்சி தலைமுறைகளாக தொடர்கிறது. PTSD எனப்படும் அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக்கோளாறு காரணமாக இவர்கள் பாதிக்கப்படுவார்கள். போரில் மிக மோசமான அழிவைப் பார்த்தவர்கள், போரில் ஈடுபட்டவர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் தூக்கத்தில் இருந்து பதறியடித்து கொண்டு எழுவார்கள். அவர்களுக்கு ஆண்டுக் கணக்கில் மனநலச் சிகிச்சையும் தேவைப்படும்.

எனவே, நான் தெளிவாகச் சொல்கிறேன் போர்ஒன்றும் ரோமான்டிக்கான விஷயம் இல்லை. இது ஒரு பாலிவுட் சினிமா இல்லை.. இதுமிகவும் தீவிரமான விஷயம். போர் அல்லது வன்முறை என்பது கடைசி ஆப்ஷனாக மட்டுமே இருக்கவேண்டும். இதன் காரணமாகவே நமது பிரதமர் இது போரின் சகாப்தம் அல்ல என்று கூறியிருந்தார். போர்கள் அறிவில்லாத மக்களால் நம்மீது திணிக்கப்படும்.. ஆனால் அதில் கொண்டாட எதுவுமே இல்லை.

பலரும் ஏன் நாம் முழுவீச்சில் போரை ஆரம்பிக்கவில்லை என்று கேட்கிறார்கள். ஒரு ராணுவ வீரராக, கட்டளையிடபட்டால், நான் முதல் ஆளாகப் போருக்குச் செல்வேன்.. ஆனால், அது எனது முதல்ஆப்ஷனாக இருக்காது. எனது முதல் தேர்வு எப்போதும் பேச்சுவார்த்தையாகவே இருக்கும். பேச்சுவார்த்தை மூலம் கருத்துவேறுபாடுகளைத் தீர்ப்பதும், மோதல் ஏற்படுவதைத் தடுப்பதும்தான் முக்கியம்.

தேசிய பாதுகாப்பில் நாம் அனைவருக்கும் சமமான பங்கு இருக்கிறது.. நாம் எப்போதும் ஒரு பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வுகாண வேண்டும். இது இரு நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைக்கு மட்டும் இல்லை.. குடும்பத்திற்குள், மாநிலங்களுக்கு இடையே, பிராந்தியங்களுக்கு இடையே, சமூகங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளும் இதுவே தீர்வாகஇருக்கும். வன்முறை என்பது தீர்வாகாது.. போரை அதிகம் பார்த்த நான் இதைச் சொல்கிறேன். புரிந்துகொள்ள முயலுங்கள்” என்றார்.

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் புகலிடங்களை இந்திய ராணுவம் அழித்தது. இதில் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இது இந்தியப் பாதுகாப்புப் படையின் மிகப்பெரிய வெற்றியாகவே கருதப்பட்டது.

அதேநேரம் இந்தியாவின் இந்த வெற்றியைப் பார்த்து பொறுக்காத பாகிஸ்தான், இந்தியாவின் எல்லையோரப் பகுதிகளில் தாக்குதல்நடத்தியது. காஷ்மீர் தொடங்கி பஞ்சாப் வரை எல்லையில் பல இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தமுயன்றது. முதல் சில நாட்கள் இந்தியா திரும்பத் தாக்கவில்லை. இந்தியாவை நோக்கி வரும் ட்ரோன்களை தடுக்க மட்டுமே செய்தது. ஆனால், பிறகு திருப்பி அடிக்க தொடங்கியது. இதை பாகிஸ்தான் துளியும் எதிர்பார்க்கவில்லை.

இதனால் பாதிப்புகள் மிக மோசமாகப் போகும் என அஞ்சிய பாகிஸ்தான், போர் நிறுத்தம் செய்யக் கோரிக்கை விடுத்தது. இந்தியாவும் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகப் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டது. அது புரியாமல் உளரும் விஷமிகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே பேச்சு இருக்கிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜ ...

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் ஆமதாபாத் விமான விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனிய ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனியாவது திருந்தட்டும்; நயினார் நாகேந்திரன் காட்டம் ''மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்'' என ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகள ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட வேண்டும்: மோடிக்கு அண்ணாமலை கடிதம் 2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்ப ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...