இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை நன்கு பெருக்கும். மலமிளக்கி வெளியேற்றும். இதன் குணம் நெல்லிகாயைப் பகற்பொழுதில் உண்டால், பைத்தியம், கபநோய், பிரமேகம் இவை போகும். காமன் அழகுண்டாகும், அதன் புளிப்பால் வாயுவும், துவரால் கபமும் நீங்கும்.
நெல்லிக்காய் துவையல் செய்து சாப்பிட அரோசகம் நெல்லிவற்றல் அல்லது விதையைக் கஷாயஞ் செய்து கொடுக்க, பித்தமயக்கம், தாகம், அரோசகம், ஒக்காளம் இவை நீங்கும். இலைக் கொழுந்தை அரைத்து மோரில் கரைத்து சீதபேதிக்குக் கொடுக்கலாம். நெல்லி வற்றலைக் கஷாயம் செய்து சீனி கூட்டிப் பால் சேர்த்து சாப்பிட, பித்தச்சூடு, ஆண்குறிப்புண் வாந்தி, அரோசகம் நீங்கும்.
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.