ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: இந்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்களின் செயல்திறனை பார்த்து நாடே பெருமை கொள்கிறது என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

26 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்,தென்கொரியாவில் உள்ள குமி நகரில் கடந்த மே-27 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

43 நாடுகள் பங்கேற்ற 2025-ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் சீனாவுக்கு அடுத்து இந்தியா 2வது இடம் பிடித்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப்பிறகு ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா, 8 தங்கப்பதக்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்கள் பெற்ற பதக்க பட்டியலில் 2வது இடம் பிடித்தது.

பதக்கபட்டியலில் 15 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 26 பதக்கங்கள் குவித்து சீனா,முதலிடம் பெற்றது.ஜப்பான் 4 தங்கம், 10 வெள்ளி,10 வெண்கலம் என 24 பதக்கங்கள் குவித்து 3வது இடம் பிடித்தது.

பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:

தென் கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற 2025 -ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நமது அணியின் அற்புதமான செயல்திறனுக்காக இந்தியா பெருமை கொள்கிறது. ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கடின உழைப்பும், உறுதியும் போட்டி முழுவதும் தெளிவாகத் தெரிந்தது. விளையாட்டு வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு பிரதமர் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...