ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடுகளில் இந்தியா 3-வது இடம்

ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 3வது இடத்தை பிடித்து உள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த லோவி என்ற நிறுவனம் புவிசார் அரசியலை சமாளிக்கும் திறனை வைத்து ஆசியாவில் சக்திவாய்ந்த நாடுகள் (Asia Power Index) பட்டியலை தயாரித்து உள்ளது. ஆசியா – பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 27 நாடுகளின் பொருளாதார திறன், ராணுவ திறன் மற்றும் மற்ற ராஜதந்திர செல்வாக்கு ஆகியவை அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இப்பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது

2வது இடத்தில் சீனா

3வது இடத்தில் இந்தியா

4வது இடத்தில் ஜப்பான்

5வது இடத்தில் ஆஸ்திரேலியா

6வது இடத்தில் ரஷ்யா

 

7 வது இடத்தில் தென் கொரியா

8 வது இடத்தில் சிங்கப்பூர்

9 வது இடத்தில் இந்தோனேஷியா

10 வதுஇடத்தில் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

இதற்கு முன்பு இந்தியா 4வது இடத்தில் இருந்தது. இந்தாண்டு, ஜப்பானை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு முன்னேறி இந்தியா சாதனை படைத்து உள்ளது.

இது தொடர்பாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது: ஜப்பான் மற்றும் சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இளம் தலைமுறையினர் காரணமாக, வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதுடன், வேலைபார்ப்பவர்களின் எண்ணிக்கையும் உயரும்.

தூதரக ரீதியிலும், பிராந்திய பாதுகாப்பிலும் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. குவாட் போன்ற அமைப்புகளில் இடம் பெற்றுள்ளது, பிராந்திய பேச்சுவார்த்தைகளில் தலைமைப்பண்பு ஆகியவை காரணமாக பிராந்திய பாதுகாப்பில் இந்தியாவின் நிலை வலிமை ஆகி உள்ளது. இதற்காக எந்த ராணுவ ரீதியிலும் எந்த நாட்டுடனும் கூட்டணி வைக்கவில்லை. பிலிப்பைன்சுக்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி உள்ளிட்ட பாதுகாப்பு ஒப்புந்தங்கள் இந்தியாவின் விரிவடைந்துவரும் புவிசார் அரசியல் நோக்கங்களை எடுத்து காட்டுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்து உள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்கு பின்பு, இந்தியாவின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவு மீண்டது. இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் மாபெரும் வலிமையான ஜிடிபி வளர்ச்சி காரணமாக 3வது பெரிய பொருளாதாரமாகஉருவாக இந்தியா உருவெடுத்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப் ...

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்ல ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் – அண்ணாமலை ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கி ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீத ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம் 'யுனெஸ்கோ' உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோ ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...