டில்லியில் தனது இல்லத்தில் பிரதமர் மோடி ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்டார். அவர் மண்வெட்டி வைத்து குழி தோண்டி, மரக்கன்றை நடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 5ல் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினமான இன்று டில்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் மோடி ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்டார். அவர் மண்வெட்டி வைத்து குழி தோண்டி மரக்கன்றை நடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமீபத்தில் கட்ச் நகருக்கு விஜயம் செய்தபோது, 1971ம் ஆண்டு போரில் குறிப்பிடத்தக்க துணிச்சலை வெளிப்படுத்திய பெண்கள் குழு பிரதமர் மோடியைச் சந்தித்து சிந்தூர் மரக்கன்றுகளை வழங்கியது. இந்த மரக்கன்றை நடவு செய்து பராமரிப்பேன் என அந்த பெண் குழுவிடம் பிரதமர் மோடி கூறியிருந்தார். தற்போது அந்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றி உள்ளார்.
இதற்கிடையே, சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டில்லியில் 200 எலெக்ட்ரிக் பஸ் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி உடன் டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, டில்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |