பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – கனடாவில் பிரதமர் மோடி பேச்சு

வளர்ந்த பொருளாதார நாடுகளாகக் கருதப்படும் ஏழு நாடுகளின் கூட்டமைப்பு ஜி-7 கூட்டமைப்பு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாடுகளுக்கு இடையேயான கூட்டங்களில் பொருளாதார முன்னேற்றம், வணிகம் சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இந்த கூட்டமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளது.

வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் ஜி-7 மாநாடு, இந்தாண்டு கனடாவில் கடந்த ஜூன் 15ஆம் தேதி 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், பங்கேற்பதாக இருந்தது. ஆனால், இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரின் காரணமாக டிரம்ப் கனடாவில் இருந்து முன்கூட்டியே அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார்.

இந்த ஜி-7 மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்ததன் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (18-06-25) பங்கேற்றார். இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜி7 மாநாட்டு தலைவர்களிடம் வலியுறுத்தினார். இது குறித்து பிரதமர் மோடி, “உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கு நமது சிந்தனையும், கொள்கையும் தெளிவாக இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை எந்தவொரு நாடும் ஆதரித்தால், அதற்கான தக்க விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.

ஒருபுறம், எங்கள் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் அனைத்து வகையான தடைகளையும் நாங்கள் விதிக்கிறோம், மறுபுறம் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு வெகுமதி அளிக்கப்படுகிறது. வளர்ச்சி உள்ளடக்கிய பாதையை இந்தியா தேர்ந்தெடுத்துள்ளது. ஏஐ (செயற்கை நுண்ணறிவு) என்பது ஒரு ஆற்றல் மிகுந்த தொழில்நுட்பமாகும். கடந்த நூற்றாண்டில் ஆற்றலுக்கான போட்டி இருந்தது. ஆனால், இந்த நூற்றாண்டில் தொழில்நுட்பத்திற்காக நாம் ஒத்துழைக்க வேண்டியிருக்கிறது” எனப் பேசினார்.

கனடாவில் இருக்கும் பிரதமர் மோடி, அங்கு நடக்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருக்கிறார். முன்னதாக சைப்ரஸ், குரோஷியா, கனடா ஆகிய நாடுகளுக்கு அரசு முறையாகப் பயணம் மேற்கொண்டார். ஜி-7 கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத போதிலும், இந்தியா கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு அழைப்பாளராக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...