மதச்சார்பின்மை இருக்கிறதா: தமிழக பா.ஜ., சந்தேகம்

:திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா எனும் சந்தேகம் ஏற்படுகிறது என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் உள்ளூர் பக்தர்களுக்கே தரிசனக் கட்டணம் விதிக்கப்பட்ட கொடூரத்திற்கு மத்தியில், அதனை எதிர்த்து போராடிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கடவுளை தரிசிக்க வந்த சன்னியாசியிடம் படகு சேவைக்கு கட்டணம் வசூலித்த சொந்த மருமகனை சிரச்சேதம் செய்த மன்னர் விஜயரகுநாத சேதுபதி வாழ்ந்த மண்ணில், இப்படி ஒரு அவலம் நேர வேண்டுமா?

சில நாட்களுக்கு முன் ‘கோவிலுக்கு செல்வது நாகரீக சமுதாயத்தின் வெளிப்பாடு இல்லை’ என திமுக அமைச்சர் ஒருவர் உரைத்த நிலையில் தற்போது, வெகு ஜன பக்தர்களின் உரிமைகளை பறிக்கும் விதம் கட்டண தரிசன முறையை அமல்படுத்தி இருப்பது, திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா எனும் சந்தேகத்தை எழுப்புகிறது.

உள்ளூர்வாசிகளுக்குக் கட்டணம் விதித்து பக்தர்கள் கோவிலுக்குச் செல்வதைத் தடுக்கும் எண்ணமா? அல்லது உண்டியல் பணத்துடன், மேலும் லாபம் பார்க்கும் எண்ணமா என்று மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகமும் தவிர்க்க முடியாதது.

இதன் உள்நோக்கம் எதுவாயினும் உள்ளுர் பக்தர்களுக்குக் கட்டணம் விதிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, ஆண்டாண்டுகாலமாக உள்ளுர்வாசிகளுக்கென வழக்கத்தில் இருந்த தரிசன முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா மட்டும் தான் போரில் இரு ...

இந்தியா மட்டும் தான் போரில் இருந்து ஒதுங்கி வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கையில் ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்த ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்தியாவைக் குறை கூறுவது தவறான தகவல் தந்திரமாகும். ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வை அமெரிக்கா மூழ்கடிக்க "அனுமதித்ததற்காக" ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த்தியாக இந்தியா ஆகும். 2023 க்கு முன்பு வெறும் 2 அல்லது 3% ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மா ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு – பிரதமர் மோடி உரை வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப் ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் திறந்து வைக்கும் மோடி தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்ச ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளமாக விளங்கும் மகளிர் சக்தி * சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...