விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தான் திமுகவின் நல்லாட்சியா? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்

விவசாயிகளின் நலனை கைகழுவி விட்டு, விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தான் திமுகவினருக்கு நாடு போற்றும் நல்லாட்சி போல் இருப்பதாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை; தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் சேமித்து வைத்திருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையினால் சேதமாகியுள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது.

2024-25ம் ஆண்டு பட்ஜெட்டில் உணவு சேமிப்புக் கிடங்குகளுக்கான நிதி ஒதுக்கீட்டை கடந்த ஆண்டைக் காட்டிலும் 50% குறைத்து விவசாயிகள் நலனை அலட்சியப்படுத்தியது திமுக அரசு. அத்தோடு நில்லாது, பயிர்களைத் தற்காலிக கொள்முதல் நிலையங்களில் எந்தவித பாதுகாப்புமின்றி மழையில் நனையவிட்டு வீணாக்கி உழவர்களின் உழைப்பை அவமதித்துள்ளது. இப்படி தொடர்ந்து உழவர் நலனைக் கைகழுவி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தான் திமுகவினருக்கு நாடு போற்றும் நல்லாட்சி போலும்.

‘நானும் டெல்டாக்காரன் தான்’ என்று இனியொரு முறை பெருமிதம் கொள்ளும் முன், டெல்டா விவசாயிகளின் துயரங்களை ஒருமுறையாவது கண்டுகொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...