நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை

நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் தீர்வு காண கடந்த நான்கு ஆண்டுகளாக தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

டெல்டா மாவட்டங்களில், மழையினாலும், பனிப்பொழிவினாலும், அறுவடையான நெல்லில் ஈரப்பதம் அதிகரித்திருக்கிறது. இதனால், வழக்கமான 17% ஈரப்பதம் கொண்ட நெல்லை மட்டும் கொள்முதல் செய்யாமல், 22% ஈரப்பதம் உடைய நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி.

கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக பா.ஜ., சார்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, 22% ஈரப்பதம் உடைய நெல்லைக் கொள்முதல் செய்ய அனுமதி பெற்றுத் தந்திருந்தோம். விவசாயிகள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, பா.ஜ., தொடர்ந்து துணையிருக்கும்.

ஆனால், தி.மு.க., அரசு செய்து கொண்டிருப்பதென்ன? தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், விவசாயிகளைக் காக்க வைத்து, அதன் பின்னர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்ற பெயரில் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும், சம்பா பயிர் அறுவடைக் காலத்தில், பருவமழை பெய்வதால், நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் தீர்வு காணக் கடந்த நான்கு ஆண்டுகளாக தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

கடந்த ஆண்டு விவசாய பட்ஜெட்டில், 50% மானியத்தில், நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம் வாங்க 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்த தி.மு.க., அரசு, அதன் பிறகு கடந்த நவம்பர் மாதம் வரை அது குறித்துப் பேசவே இல்லை. நெல் உலர்த்தும் இயந்திரம் வாங்க 50% மானியம் மட்டும் கொடுத்தால், மீதமுள்ள நிதிக்கு, சிறு குறு விவசாயிகள் எங்கே செல்வார்கள்?

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும், தொகுதி மேம்பாட்டு நிதியாக, ஆண்டொன்றுக்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், இந்த நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் விவசாயிகளுக்கு இத்தனை ஆண்டுகளாக நெல் உலர்த்தும் இயந்திரம் வாங்கித் தரவில்லை?

நான்கு இரும்புக் கம்பிகளை நட்டு, மேலே ஒரு ஆஸ்பெட்டாஸ் கூரையை வைத்து, நிழற்குடை என்ற பெயரில் 10 லட்சம், 20 லட்சம் என்று கணக்குக் காட்டிக் கொள்ளையடிக்கும் பணத்தில், ஆண்டுக்கு 10 நெல் உலர்த்தும் இயந்திரங்கள் வாங்கி கொடுக்கலாமே! தொகுதி மேம்பாடு என்பது, தங்கள் பெயரை விளம்பரப்படுத்திக் கொள்வது மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா டெல்டா மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள்?

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் எதிர்கொள்ளும் இந்த ஈரப்பத பிரச்னை, இந்த ஆண்டே இறுதியாக இருக்கட்டும். டெல்டா மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், தொகுதி மேம்பாட்டு நிதியில், நெல் உலர்த்தும் இயந்திரங்களை வாங்கி, விவசாயிகள் இலவசப் பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை வேண்டும் என்றும், தி.மு.க., அரசு தனது வழக்கமான நாடகத்தை நிறுத்தி விட்டு, இதனை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...