அனைத்து மொழிகளையும் மதிப்போம்: ஹிந்தி தினத்தில் அமித் ஷா கருத்து

:’ஹிந்தி உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் மதித்து, தன்னம்பிக்கை நிறைந்த வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி முன்னேறுவோம்’ என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நாடு முழுதும் செப்., 14ம் தேதி ஹிந்தி மொழி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:

நம் நாடு, அடிப்படையில் மொழி சார்ந்ததாகும். கலாசாரம், வரலாறு, மரபுகள், அறிவு, அறிவியல், தத்துவம், ஆன்மிகம் ஆகியவற்றை தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்து செல்லும் சக்திவாய்ந்த ஊடகமாக நம் மொழிகள் உள்ளன. ஒவ்வொரு சூழலிலும், மனிதன் ஒழுக்கத்துடனும், ஒற்றுமையாக முன்னேறவும் மொழிகள் வழிகாட்டியுள்ளன.

‘ஒன்றாக நடப்போம், ஒன்றாகச் சிந்திப்போம், ஒன்றாகப் பேசுவோம்’ என்பது நம் மொழியியல் கலாசார உறவின் மைய மந்திரமாக உள்ளது.

திருவள்ளுவரின் கருத்துகள், தெற்கில் ஆர்வத்துடன் படிக்கப்படுவதைப் போல் வடக்கிலும் போற்றப்படுகிறது. சுப்பிரமணிய பாரதியின் தேசபக்திப் பாடல்கள் ஒவ்வொரு பிராந்திய இளைஞர்களிடமும் தேசிய பெருமையைத் துாண்டுகின்றன.

ஹிந்தி உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் மதித்து, தன்னம்பிக்கையை வளர்த்து, வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி முன்னேறுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.