புதுமை படைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்; பிரதமர் மோடிக்கு ஜப்பான் விஞ்ஞானி பாராட்டு

அறிவியல் தொழில்நுட்பத்துறையில், இந்திய – ஜப்பானிய ஒத்துழைப்பு தொடர்பான பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஜப்பானிய விஞ்ஞானிகள் குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

புதுமை படைப்பது, கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் முன்னேற்றம் காட்டும் உலக நாடுகளின் பட்டியல் ஆண்டு தோறும் ‘குளோபல் இன்னவேஷன் இன்டெக்ஸ்’ (கில்) என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில், 2014ம் ஆண்டில் இந்தியா 91ம் இடத்தில் இருந்தது. 2020ம் ஆண்டில் இந்த பட்டியலில் இந்தியா, 48ம் இடத்துக்கு முன்னேறியது. 2025ம் ஆண்டில் இந்த பட்டியலில் இந்தியா 38ம் இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

இதை, ஜப்பானை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பிரபல விஞ்ஞானியான டக்காய் கஜிதா பாராட்டியுள்ளார். இவரும், ஜப்பானை சேர்ந்த 20 பிரபல விஞ்ஞானிகளும் ஒரு தீர்மான அறிக்கை வெளியிட்டுள்ளனர். அறிவியல் தொழில்நுட்பத்துறையில் ஆராய்ச்சி மற்றும் புதுமை படைப்பதற்கான இந்திய- ஜப்பானிய ஒத்துழைப்பு தொடர்பான மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

‘மோடியின் தொலைநோக்கு திட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தி, அந்த தீர்மான அறிக்கையில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ‘ஆராய்ச்சியிலும், புதுமை படைப்பதிலும், விரைந்த முன்னேற்றம் காண்பதற்கு, இந்தியாவிடம் இருந்து ஜப்பான் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று, டோக்கியோ பல்கலையில் நடந்த சர்வதேச கருத்தரங்கில், டக்காய் கஜிதா வலியுறுத்தினார்.

இவர், 2015ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி. டோக்கியோ பல்கலையின் காஸ்மிக் கதிர் ஆராய்ச்சி நிறுவன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.நியூட்ரினோ ஊசலாட்டம் தொடர்பான கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...