ஆசியான் மாநாடு காணொளிகாட்சி மூலம் கலந்து கொள்ளும் மோடி

மலேசியாவில் நடைபெறவிருக்கும் ஆசியான்மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொளிகாட்சி மூலம் கலந்துகொண்டு உரையாற்றுவார் என மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 26 முதல் 28 வரை மூன்று நாள்கள் ஆசியான் உச்ச நிலை மாநாடு நடைபெறவுள்ளது.

அதில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பிரேசில் அதிபர் லூலா டிசில்வா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், தீபாவளித் திருநாள் காரணமாக மோடியால் ஆசியான் மாநாட்டில் நேரில்கலந்துகொள்ள முடியவில்லை என ஆசியான் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கும் மலேசியா கூறியுள்ளது.

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் மோடி அக்டோபர் 24ம் தேதி தொடங்கவுள்ளதால் ஆசியான் மாநாட்டில் நேரில்பங்கேற்பதை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியா – அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்றுவரும் சூழலில், ரஷ்ய எண்ணெய் கொள்முதலை குறைத்துகொள்ளப் போவதாகப் பிரதமர் மோடி தனக்கு உறுதி அளித்திருப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

டிரம்ப்புடன் கூடுதல் வரிவிதிப்பு குறித்தும் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் பற்றியும் மோடி பேசியதை இந்திய அரசு உறுதிப்படுத்த வில்லை .

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்றால் டிரம்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் மலேசிய பயணத்தை மோடி தவிர்த்திருக்கக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

ஒருநாட்டுடன் வர்த்தக பேச்சு வார்த்தை முடிவடைந்த பிறகுதான், தலைவர்கள் நேரில் சந்தித்துக் கொள்வது இந்தியாவின் வழக்கம் .

கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்றபிறகு, 2022ஆம் ஆண்டைத்தவிர அனைத்து ஆசியான் உச்சநிலை மாநாட்டிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

இந்த முறை ஆசியான் மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

முன்னதாக, எகிப்தில் நடைபெற்ற இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்விலும் மோடிக்கு அழைப்பு விடுக்கபட்டது.

அந்த அமைதிமாநாடு டிரம்ப் தலைமையில் நடைபெற்றதால், மோடி நேரில்செல்வதை தவிர்த்து, வெளியுறவுத் துறை இணையமைச்சரை அனுப்பிவைத்தார் என்பது குறிப்பிட தக்கது.

இதற்கிடையே, டிரம்ப்பிடமிருந்து தப்பிக்கவே மலேசிய பயணத்தை மோடி தவிர்த்ததாக காங்கிரஸ் சாடியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...