S. I. R. உருப்படியான வேலையை முடித்திருக்கிறது

தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான வேலையை செய்து முடித்திருக்கிறது.

தமிழ் நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் என்பது தவறு. 97 லட்சம் பெயர்கள்தான் நீக்கப்பட்டுள்ளன. அதாவது, வாக்காளர் இல்லாமல் பெயர் மட்டும் பட்டியலில் இடம் பெற்றிருந்ததுதான் அந்த 97 லட்சம். அவை அப்படியே இருந்திருந்தால் கள்ள ஓட்டு போடவே பயன்பட்டிருக்கும். அது இப்போது தடுக்கப்பட்டுள்ளது.

முன் இருந்த பட்டியலில் இடம் பெற்ற பெயர்களுக்கு உரியவர்கள் உண்மையிலேயே குறிப்பிட்ட முகவரிகளில் இருக்கிறார்களா என்று சரி பார்ப்பது மட்டுமே S. I. R. ன் பணி. அது நடந்து முடிந்துள்ளது.

இறந்தவர்களின் பெயர்கள், முகவரி மாறிய பிறகும் பழைய முகவரியிலிருந்து நீக்கப்படாத பெயர்கள், நிரந்தரமாக வெளியேறிய பிறகும் நீக்கப்படாத பெயர்கள், கள்ள ஓட்டு போடுவதற்காகவே சேர்க்கப்பட்ட பெயர்கள்- S. I. R. க்கு பிந்தைய பட்டியலில் இருக்காது.

அப்பெயர்களுக்கு உரியவர்கள் வர முடியாது என்பதால் அவை தானாகவே நீங்கி விட்டன.

உண்மையான வாக்காளர்கள் சிலரும் தங்கள் பெயர் பட்டியலில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பாமல், அல்லது அக்கறையின்றி S. I. R. படிவத்தை திருப்பிக் கொடுக்காமல் தங்களிடமே வைத்திருந்தால், தொடர்பு இல்லாத காரணத்தால் அவர்கள் பெயர்களும் நீக்கப்பட்டு விட்டிருக்கும்.

அவர்கள் இப்போது உரிய ஆதாரங்களைக் காட்டி பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம். அவகாசம் இருக்கிறது.

எனவே, ஆளே இல்லாமல் பெயர் மட்டும் பட்டியலில் இருந்த பழைய நிலை இப்போது மாற்றப்பட்டுள்ளது. இது நல்ல விஷயம். தேர்தல் உண்மையாக நடக்க இது உதவும்.

இப்பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது, தேர்தலுக்குப் பிறகு நீக்கலாமே என்றெல்லாம் குரல் கொடுத்தவர்களுக்கு நல்ல நோக்கம் இருக்க முடியாது. S. I. R. அதை முறியடித்துள்ளது.

கள்ள ஓட்டுகளுக்கு இடம் இல்லாமல் தேர்தல் நடத்துவது நமது ஜனநாயகத்தில் கஷ்டமான காரியம். எனினும் அதை பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளது தேர்தல் கமிஷன்.

பாராட்டுவோம்.

– துக்ளக் சத்யா

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...