சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் இருந்தபோதும் அது சரியாகப் பயன்படுத்தப்படாமல் போவதால் இரத்தத்தில் அட்டிக அளவு சர்க்கரைச் சாத்திருக்கும்.
தவிர்க்க வேண்டியவை :
எனவே, இவர்கள் நேரடியாகச் சர்க்கரை சத்து மிகுந்துள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
பல்வேறு பழரசங்கள், இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள், உலர்ந்த பழங்கள், பாட்டில் மற்றும் டின்னில் அடைக்கப்பட்ட பழங்கள், பல்வேறு கேக் வகைகள்.
கிரீம் வகைகள், மது வகைகள்
சர்க்கரை, உருளைக் கிழங்கு போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உணவின் மூலமாக இரத்தத்தில் சரக்கைச் சத்தின் அளவை ஒரே சீராக வைத்திருக்க வேண்டும். அதிகமாகச் சர்க்கரைச் சத்து நிறைந்த உணவை உண்டால் அது பல்வேறு பிரச்சனைகளையும் உண்டாக்கும். அதேபோன்றே உணவே சாப்பிடாம இருந்தாலும் இரத்தத்தில் சர்க்கரை சத்து பெரிதும் குறைந்து பல்வேறு தொந்தரவுகளையும் ஏற்படுத்தும்.
கார்-போ-ஹைட்ரேட் உணவு :
இவர்கள் தினமும் 250 கிராமிற்கும் குறைவான கார்போஹைட்ரேட் உணவையே சாப்பிட வேண்டும். திடீரென இந்த வகை உணவுகளைப் பெருமளவு குறைக்கின்றபோது… உடல் சக்தியைப் பெறுவதற்காக உடலிலுள்ள கொழுப்புச் சத்துகள் பயன்படுத்தப்படும். இவை ஆதிகமாகப் பயம்படும் போதுஎன்னற்ற கழிவுப் பொருட்கள் பெரிதும் உடலிலுண்டாகி, அவை அதிகமாய் உடலுக்குக் கேட்டை விளைவிக்கும். நீரிழிவு நோயில் உண்டாக்கும் அமில நோய்.
கலோரி அளவு ;
எடை குறைந்தவரகளுக்கும், குழந்தைகளுக்கும் போதுமான சக்தி தரும் உணவைத் தர வேண்டும். எடை அதிகமாகவும், தொந்தி உள்ளவார்களும், இந்த 'கலோரி' அளவைக் குறைப்பது மிகவும் அவசியமாகும். இவர்கள் அதிக அளவிற்குப் பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவில் 3% சதவீகித அளவே கார்போ-ஹைட்ரேட் உணவைச் சாப்பிட வேண்டும்.
புரோட்டீன் உணவு :
தினமும் புரதம் நிறைந்த உணவை 1 கிலோ உடல் எடைக்கு 1 கிராம் வீதம் தர வேண்டும். மிகுதியாகப் புரோட்டீன் உள்ளது.
கொழுப்பு உணவு;
கொழுப்பு நிறைந்த உணவுகளைக் குறைவாக சாப்பிட வேண்டும். இதனால், இரத்தத்தில் "கொலஷ்டிரால்" குறைந்துவிடும். இது உடலுக்கு மிகவும் உகந்ததாகும். அதே போன்றே வைட்டமின் பி நிறைந்த உணவுகளைத் தர வேண்டும். இவை சர்க்கரை வியாதியால் வரும் நரம்புப் பாதிப்பு போன்றவற்றை வராமல் உடலைப் பாதுகாக்கின்றன.
பல்வேறு வகையான தாது உப்புகளில்… பொட்டஷியம் மிகவும் தேவையான ஒன்றாகும். இது இன்சுலின் தயாரிப்பதற்குத் தேவைப்படுகிறது.
பிற இனிப்புப் பொருட்கள் :
காப்பி, டீ மற்றும் பிற சூடான பானங்களுக்கு சர்க்கரை மிகவும் அவசியமாகும். இனிப்பு இல்லாமல் இவற்றைப் பருக முடியாது. எவ்வளவு ருசியறியாதவர்களுக்கும் சர்க்கரைச் சத்து அதிகரிக்கும். இதடித் தடுக்க இரத்தத்தில் சர்க்கரைச் சத்து அதிகரிக்கும்.
இதைத் தடுக்க இனிப்பாக இருக்கும்படியான ஒரு பொருளைப் பருக இருக்கின்ற சூடான பானத்துடன் கலக்க வேண்டிய அதே வேளையில்.. அடந்த பொருளின் மூலம் சர்க்கரைச் சத்த இரத்தத்தில் அதிகரிக்காதபடியும் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படிச் சில வகை பொருட்களைத் தற்சமயம் தயாரித்து வருகிறார்கள். அவற்றில் முக்கியமானவை.
சாக்கரைன்
சார்பிட்டால்
சோடியம் கிளைக்கிலாமேட்
ஆகியவையாகும்.
மேற்கூறியவற்றில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது சாக்கரைன் எனப்படும் பொருளாகும். இது சாதாரண சீனியைவிட 300 முதல் 500 மடங்கு இனிப்பு நிறைந்ததாகும். அதே நேரத்தல்… இதன் மூலம் எந்த வித "கலோரி"யும் உடலுக்குக் கிடைப்பதில்லை. அதேநேரம் இரத்தத்த்ளும் சர்க்கரைச் சத்து ஏறுவது கிடையாது. இது மாத்திரையாகவு கிடைக்கிறது. ஒரு மாத்திரையானது ஒரு கப் காப்பிக்குத் தேவையான இனிப்பையும், சுவையையும் தருகிறது.
"சார்பிட்டால்" என்பது குளூக்கோஷிலிருந்து மாற்றமடைந்து கிடைக்கும் ஒரு பொருளாகும். இது உடலில் "ப்ரக்டோஷ்" என்ற பொருளாக மாறிவிடும். இதனால் , உடலில் குளுக்கோஸ் சத்து கூடுவது கிடையாது. பல்வேறு வகையான 'டானிக்' மருந்துகளில் இந்த 'சார்பிட்டால்' உள்ளது.
மூன்றாவது சோடியம் கிளைக்கிலோமேட் என்பது அதிகம் பயம்படாத பொருளாகும்.
சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட ஒருவ எப்படிப்பட்ட உணவுகளைத் தினமும் உட்கொள்ளளால் என்பதைத் தெரிந்து கொள்ள இங்கே ஒரு 'மாதிரி' காட்டப்பட்டுள்ளது.
மாதிரி உணவு;
காலை : காப்பி /டீ போன்ற சூடான பானம் 1 கப்
காலை சிற்றுண்டி : 2 ரொட்டி துண்டுகள்; சிறிது வெண்ணெயும் கலந்து
மதியம் : சோறு சிறிது அளவு, பருப்பு ¾ பாகம், பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு, எண்ணெய்.
அதன்பிறகு : தேநீர் 1 கப்
மாலை : பலம் ஒன்று
இரவு : சோறு சிறிய கப், பருப்பு, மற்றும் பச்சைக் காய்கறிகள், பச்சடி.
இரவு உறங்கும் முன் ; பதப்பட்டுத்தப்பட்ட சுத்தமான பால் சர்க்கரை இல்லாமல்
மேற்கூறிய முறையில் கிடைக்கும் சக்தியின் அளவு 1500 கலோரியாகும். கார்-போ-ஹைட்ரேட் அளவு 250 கிராம் அளவாகும்.
நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.