தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன்

அதிமுக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் அம்மாமக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வரும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில் அதில் பாமகவின் அன்புமணிதரப்பு இணைந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றகழகம் மீண்டும் இணைந்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களுடன் பேசியபோது இதனை உறுதிப்படுத்தினார்.

அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் மக்கள் விரும்புகிற நல்லாட்சிக்கு எங்களுடைய ஆதரவை தெரிவிக்கிறோம். என்றைக்கும் விட்டுகொடுத்துப் போனவர்கள் கெட்டுப் போவதில்லை. என்னதான் இருந்தாலும் இது பங்காளிச்சண்டை. ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்’ என ஏற்கெனவே நான் பொதுக்குழுவில் சொன்னேன். பழைய விஷயங்களை நினைத்து, கட்சிநலனையும் தமிழ்நாட்டு நலனையும் பின்னுக்குத் தள்ளிவிடக் கூடாது என்று நோக்கத்தோடு இந்த முடிவெடுக்கிறோம். நாங்கள் விட்டுக் கொடுப்பதால் கெட்டுப்போவதில்லை.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்ற முறையில் ஓரணியில்திரண்டு மீண்டும் தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சிவருவதற்கு மக்களாட்சி வருவதற்கு நல்லாட்சி வருவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம்” என்று தெரிவித்தார்.

கூட்டணிதொடர்பாக டிடிவி தினகரன் இன்று(புதன்கிழமை) காலை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்தித்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மூத்ததலைவர்கள் உடனிருந்தனர். பியூஷ் கோயல் உள்ளிட்டோருடன் டிடிவி தினகரன் புகைப்படம் எடுத்துக்கொண்டு கையைஉயர்த்தி கூட்டணியை உறுதி செய்தார். தொடர்ந்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. என்டிஏ கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக(அன்புமணி), அமமுக, ஜிகே. வாசனின் தமாகா ஆகிய கட்சிகள் உள்ளன. தேமுதிகவையும் இணைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.ர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.