பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோரை குறிவைத்து தாக்குதல் நடத்த விடுதலை புலிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டி.ஜி.பி. லத்திகா சரண் இதுதொடர்பான எச்சரிக்கை வந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்,
இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையில் உண்மை இருக்கிறதா என்பதை கண்டறிய உளவு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து முக்கிய பிரமுகர்களும் தமிழகத்துக்கு எந்த பிரச்னையும் இன்றி வந்து செல்லும் வகையில் உரியபாதுகாப்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார் லத்திகா சரண்.
அதே, பழைய பல்லவியை , பாட ஆரம்பிச்சிட்டாங்கையா! ஆரம்பிச்சிட்டாங்க! தமிழ்நாட்டில் இனிமேல் கொசுகடித்தால் கூட இதனையேதான் சொல்லுவாங்க! ஸ்பெக்ட்ரம் ஊழலை திசைதிருப்ப இந்த பிரச்னை கிளப்பபடலம் . விடுதலை புலிகள் இயக்கம் மீண்டும் இயங்க முடியாது என இலங்கை ராணுவதளபதி ஜெகத்ஜயசூரிய கூட நேற்று நம்பிக்கை தெரிவித்துள்ளார், விடுதலை புலிகள் மிதான தடை குறித்த வைகோவின் வழக்கும் மத்திய அரசுக்கு அது தொடர்பாக உயர்நீதி மன்றம் அனுப்பிய நோட்டிஸ், அதற்கான பதிலாகவே கூட இந்த உளவு துறை எச்சரிக்கை இருக்கலாம் !
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
Leave a Reply
You must be logged in to post a comment.