மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டு க்கான பொதுபட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்து வருகிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் செவ்வாய்க் கிழமை தொடங்கியது. 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல்செய்துள்ளார். அவா் தாக்கல்செய்யும் 5-ஆவது நிதிநிலை அறிக்கையாகவும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசின் கடைசி முழுநேர நிதிநிலை அறிக்கை இது.
தற்போதய நாடாளுமன்ற வளாகத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும்.
மன்மோகன் சிங், அருண்ஜெட்லி மற்றும் ப சிதம்பரம் போன்ற ஜாம்பவான்களைத் தொடர்ந்து, ஐந்துமுறை தொடர்ச்சியாக பொது பட்ஜெட்டைத் தாக்கல்செய்யும் சுதந்திர இந்தியாவின் ஆறாவது நிதியமைச்சராகிறார் நிர்மலா சீதாராமன்.
நிர்மலா சீதாராமன் தற்போது தாக்கல்செய்யும் 2023ஆம் ஆண்டின் பொதுபட்ஜெட்டானது, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்தாவது முறையாகும்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர்கள், அருண்ஜெட்லி, ப சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா, மன்மோகன் சிங் மற்றும் மொரார்ஜி தேசாய் ஆகியோர் ஐந்து முறை வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பித்த மற்ற அமைச்சர்கள் ஆவர்.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |