புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்களைப் பொதுமக்கள் வழிபடுவதற்குத் திறந்து வைத்ததற்காக இலங்கை அதிபருக்குப் பிரதமர் நன்றி

கொழும்பில் உள்ள புனித கங்காராமய புத்த விகாரையில் புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்களைப் பொதுமக்கள் வழிபடுவதற்குத் திறந்து வைத்ததற்காக இலங்கை அதிபர் திரு அனுர குமார திசாநாயக்கவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 2025-ல் இலங்கைக்குத் தாம் பயணம் செய்தபோது, இந்த புனித நினைவுச்சின்னங்கள் இலங்கைக்கு அனுப்பப்படும் என்று முடிவு செய்யப்பட்டதையும், இதன் மூலம் மக்கள் மரியாதை செலுத்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்தப்பட்டதையும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்தியாவும் இலங்கையும் பல நூற்றாண்டுகளாகப் பாரம்பரியம், கலாச்சார பரிமாற்றம் ஆகியவற்றால் ஆழமான நாகரிக, ஆன்மீக உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை திரு மோடி எடுத்துரைத்துள்ளார். புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்கள் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு இருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த ஆன்மீக பிணைப்புக்கு ஒரு சான்றாகும் என்று அவர் கூறியுள்ளார்.

பகவான் புத்தரின் கருணை, அமைதி, நல்லிணக்கம் ஆகியவை பற்றிய காலத்தால் அழியாத செய்தி, எல்லைகளைக் கடந்து ஒற்றுமையையும் புரிதலையும் வளர்த்து, அதன் மூலம் மனிதகுலத்தை தொடர்ந்து வழிநடத்தும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“கொழும்பிலுள்ள புனித கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி சின்னங்களைப் பொது மக்கள் வழிபடுவதற்காகத் திறந்து வைத்தமைக்காக இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவுக்கு நன்றி.

2025 ஏப்ரலில் எனது இலங்கைக்கு பயணம் மேற்கொண்டபோது இச்சின்னங்களை இலங்கைக்கு அனுப்புவது குறித்து தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இவற்றை இலங்கை மக்கள் வழிபடுவதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. நமது நாடுகள் ஆழமான நாகரீக, ஆன்மீக பிணைப்புகளினால் இணைக்கப்பட்டுள்ளன. புத்த பெருமானின் கருணை, அமைதி, நல்லிணக்கம் ஆகியவை குறித்த காலத்தால் அழியாத செய்தியானது தொடர்ந்து மனித குலத்துக்கு வழிகாட்டட்டும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...