பட்ஜெட் குறித்து லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா உரை

லோக்சபாவில் பட்ஜெட் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. 2026-27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தற்போது பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. நேற்றைய விவாதத்தில், இந்த ஆண்டு பட்ஜெட் நமது நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு எவ்வாறு பங்களிக்கும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் அளித்தார்.

பாராட்டு ”காங்கிரஸ் எம்பி ராகுல், மத்திய பட்ஜெட்டை படிக்காமல் வந்து பேசி உள்ளார். ஏழைகள், விவசாயிகள் நலனை விற்றதே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான்” என நிர்மலா கடுமையாக சாடி பேசி பதிலடி கொடுத்து இருந்தார். இந்நிலையில் இன்று நிர்மலா சீதாராமன் பேசிய வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்து இருக்கிறார்.

முக்கியத்துவம் இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ”இந்த ஆண்டு பட்ஜெட் நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு எவ்வாறு பங்களிக்கும் என்பது குறித்து நிர்மலா சீதாராமன் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். சீர்திருத்த நடவடிக்கை கள், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு, திறன் மேம்பாடு, அடுத்த தலைமுறை உள்கட்டமைப்புக்கு ஊக்கம், கல்வி உள்ளிட்ட பலவற்றிற்கு முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...