இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் உரிய முறையில செயல்படுகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியப் பெருங்கடலில் 2004 டிசம்பர் மாதத்தில் சுனாமி ஏற்பட்டதையடுத்து மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ், ஐதராபாத்தில் அமைந்துள்ள இந்திய பெருங்கடல் தகவல் சேவைக்கான தேசிய மையத்தில் இந்திய சுனாமி எச்சரிக்கை மையத்தை மத்திய அரசு ஏற்படுத்தியது. 2007 அக்டோபர் 15 முதல் செயல்படும் இந்த மையம் நில அதிர்வு, கடல் மட்டத்தைக் கண்காணித்தல் ஆகியவற்றிற்கு மேம்பட்ட முறைகளைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் பத்து நிமிடங்களுக்குள் சுனாமியுடன் நில நடுக்கம் குறித்து கண்டறிந்து வழிகாட்டு நெறிமுறைகளின் படி சுனாமி அறிவுரைகளை வழங்குகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 6.5 அல்லது அதற்கு அதிகமான ரிக்டர் அளவில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் 8 நிலநடுக்கங்கள் உட்பட 143 சுனாமியுடன் கூடிய நிலநடுக்கங்களை கண்டறிந்துள்ளது. ஒவ்வொரு நிகழ்விலும் இந்த மையம் விரிவாக மதிப்பீடு செய்து இந்தியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமி அச்சுறுத்தல் ஏதுமில்லை என்று உறுதிப்படுத்தியது. இந்த மையம் தொடர்ந்து உரிய நேரத்தில் சுனாமி எச்சரிக்கை அறிவுறுத்தல்களை அளித்து வருகிறது. அதேபோல், கடந்த ஐந்து ஆண்டுகளில் சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 8 சுனாமி ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றுள்ளது. இவற்றில் இந்தியப் பெருங்கடல் பிராந்திய அளவில் 2023 அக்டோபர், 2025 அக்டோபர் – நவம்பர் மாதங்களில் 2 பயிற்சிகள் நடைபெற்றன. அத்துடன், தேசிய மற்றும் மாநில அளவில் 6 சுனாமி ஒத்திகைப் பயிற்சிகள் நடைபெற்றுள்ளன.

இத்தகவலை மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.