2014இல் திட்டமிடப்பட்டுள்ள வரப்போகும் பாராளுமன்ற தேர்களில் என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி இப்போது பல யூகங்கள் வலம்வருகின்றன.
பதவிக் காலம் முடிந்த குடியரத் தலைவர் ஸ்ரீமதி பிரதீபா தேவிசிங்
பாட்டிலுக்கு மரியாதை அளிக்கும் விதமாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் ஒரு விருந்தளித்தார். இந்த விழா ஹைத்ராபாத் இல்லத்தில் நடத்தப்பட்டது.
விருந்துக்கு முன்னர் இரண்டு மூத்த கேபினட் அமைச்சர்களுடன் நான் பேசிக்கொண்டு இருந்தபோது, இந்த அமைச்சர்களின் மனதில் தீவிரமான கவலை இருப்பதை என்னால் தெளிவாக உணர முடிந்தது. அவர்களின் அச்சங்கள்:
அ) நாடாளுமன்றத்துக்கு நடக்கும் 16 ஆவது தேர்தலில், பாராளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மையைப் பெறக்கூடிய ஒரு கூட்டணியை காங்கிரஸாலோ அல்லது பிஜேபியாலோ அமைக்க இயலாது.
ஆ) ஆகவே 2013 அல்லது 2014இல், எப்போது தேர்தல் நடந்தாலும், அமையக்கூடிய அரசு மூன்றாவது அணியினதாக இருக்க முடியும். இது இந்தியாவின் அரசியல் நிலைத்தன்மைக்கு மட்டுமல்ல; தேச நலன்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கும் என்பது காங்கிரஸ் அமைச்சர்களின் கருத்து.
காங்கிரஸார் வெளியிட்ட இந்தக் கவலைக்கு என்னுடைய பதில்: உங்கள் கவலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் நான் அதை ஆமோதிக்கவில்லை. என்னுடைய கருத்து என்னவென்றால்:
i) காங்கிரஸ் அல்லது பிஜேபி இவற்றில் யாரோனும் ஒருவரின் ஆதரவு இன்றி புது தில்லியில் எந்த அரசையும் அமைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இதைக் காட்டுகின்றன. எனவே மூன்றாவது அணியின் அரசு என்பது இயலாத ஒன்று.
ii) இருப்பினும் காங்கிரஸ் அல்லாத, பிஜேபி அல்லாத பிரதமர் தலைமையில், இந்த இரண்டு முதன்மையான கட்சிகளில் ஒன்றின் ஆதரவுடன் அரசமைப்பது சாத்தியமே. இது கடந்த காலங்களிலும் நடந்திருக்கிறது.
ஆனால், சரண் சிங், சந்திரசேகர், தேவ கௌடா அவர்கள் மற்றும் இந்தர் குமார் குஜரால் (அனைவரையும் காங்கிரஸ் ஆதரித்தது), விஸ்வநாத் பிரதாப் சிங் (பிஜேபியால் ஆதரிக்கப்பட்டவர்) ஆகியோர் பிரதமர்களாக இருந்த ஆட்சிகள் ஒருபோதும் பதவிக் காலம் நிறைவடையும் வரை நீடித்திருக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
iii) அரசின் பிரதமராக காங்கிரஸ் அல்லது பிஜேபியைச் சார்ந்த ஒருவர் இருக்கும்போது மட்டுமே மத்தியில் நிலைத்தன்மை இருந்திருக்கிறது. துரதிஷ்டவசமாக 2004 ல் இருந்து யுபிஏ I மற்றும் யுபிஏ II என இரண்டு அரசுகளுமே மிக மோசமாக நிர்வாகம் செய்திருக்கின்றன என்பதை ஆட்சியாளர்களிடம் இருக்கும் தற்போதைய கவலை புரியவைக்கிறது.
நாடாளுமன்ற முடிவுகளைப் பொறுத்தவரையில் காங்கிரஸின் மோசமான காலம் என்று அவசர நிலைப் பிரகடனத்துக்குப் பிறகு 1977இல் நடந்த தேர்தலைத்தான் பொதுவாக மக்கள் நினைக்கிறார்கள். 1952க்குப் பிறகு காங்கிஸுக்கு மிகவும் மோசமான முடிவுகளை அடுத்து வரும் நாடளுமன்றத் தேர்தல்கள் அளித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கை முதல் முறையாக இரண்டு இலக்கங்களுக்கு அதாவது நூறுக்கும் கீழே இருக்கும் என்று ஊகிக்கும் தீர்க்கதரிசிகள், அதைச் சொல்லத் தயக்கம் காட்டுகிறார்கள்!
சமீபத்தில் நடத்தப்பட்ட உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் நீண்ட காலமாக காங்கிரஸ் தலைவர்களின் குடும்பத்தின் கோட்டையாக எண்ணப்பட்டுவரும் ராய் பரேலி, அமேதி இன்ன பிற இடங்களில் கட்சியின் மோசமான செயல்பாடுகள் மற்றும் உத்தரப் பிரதேச மாநகராட்சித் தேர்தலில் அதனுடைய தொய்வான வெற்றிகளும், அதே நேரத்தில் பன்னிரெண்டு மாநகராட்சிகளில் பத்தில் பிஜேபி பெற்றுள்ள வெற்றிகளும் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் சரிந்துவருவதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.
பிஜேபியைப் பொறுத்தவரை, கர்நாடகாவில் குழுப்பங்கள் இருந்தபோதிலும், விரைவாக அழிந்துவரும் காங்கிரஸின் மதிப்பு காரணமாக முதன்மையாக பலனடைவது பிஜேபிதான் என்பது சமீபத்திய அனைத்துக் கருத்துக் கணிப்புகளிலும் தெளிவாக வெளிப்படுகிறது!
***
1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தது. முதல் இருபது ஆண்டுகளுக்கு தேசத்தின் அரசியல் முழுமையாக காங்கிரஸ் கட்சியின் ஆளுமைக்குள் இருந்தது. காங்கிரஸ் பெயரின் கீழே சுந்திரப் போராட்டங்கள் நடத்தப்பட்டன, இது ஒரு முழுமையான அமைப்பாக இருந்தது. இயற்கையாக மத்தியிலும் பெரும்பாலான மாநிலங்களிலும் காங்கிரஸே ஆட்சி புரிந்தது.
இங்கே வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவு அட்டவணை காண்பிப்பதுபோல, மத்தியில் முதல் முறையாக ஆட்சியிழந்தது 1977இல்தான். அப்போது ஜனதா கட்சி காங்கிரஸைத் தோற்கடித்தது. பிரதமராக மொரார்ஜி பாய் தேசாய் அவர்கள் பதவியேற்றார், அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சரானார்.
1977க்குப் பிறகு அரசியல் துரிதமான மாற்றங்களுக்குட்பட்டது. 1980இல் பிஜேபி துவக்கப்பட்ட பிறகு, இந்த மாற்றங்களை அடைவதற்கு இந்தக் கட்சி இருமுனை அணுகுமுறைகளைக் கையாண்டது. முதலில் காங்கிரஸின் ஆதிக்கத்தை ஒடுக்குதல், இரண்டாவது பிஜேபியை வலிமையான தேசியக் கட்சியாக ஆக்குவதோடு, எங்கெல்லாம் சாத்தியமுள்ளதோ அந்த மாநிலங்களிலெல்லாம் கட்சியை வளர்ப்பது என்பதாகும்.
1984இல் தீவிரவாதிகளால் ஸ்ரீமதி இந்திரா காந்தி கொல்லப்பட்டதால் ராஜீவ் காந்திக்கு ஆதரவாக ஏற்பட்ட வலுவான அனுதாப அலை அந்த ஆண்டின் தேர்தலை ஆளும் கட்சிக்கும் முதன்மையான எதிர்க்கட்சிக்கும் தனித்துவம் மிக்க தேர்தலாக ஆக்கியது.
ஆண்டு |
காங்கிரஸ்
|
பிஜேஎஸ்–ஜனதா–பிஜேபி |
1952 |
364 |
3 (பிஜேஎஸ்) |
1957 |
371 |
4 (பிஜேஎஸ்) |
1962 |
361 |
14 (பிஜேஎஸ்) |
1967 |
283 |
35 (பிஜேஎஸ்) |
1971 |
352 |
23 (பிஜேஎஸ்) |
1977 |
154 |
295 (ஜனதா) |
1980 |
353 |
31 (ஜனதா) |
1984 |
415 |
2 (பிஜேபி) |
1989 |
197 |
86 (பிஜேபி) |
1991 |
232 |
120 (பிஜேபி) |
1996 |
140 |
161(பிஜேபி) |
1998 |
141 |
182(பிஜேபி) |
1999 |
114 |
182 (பிஜேபி) |
2004 |
145 |
138 (பிஜேபி) |
2009 |
206 |
116 (பிஜேபி) |
ராஜீவ் காந்தி தலைமையில் காங்கிரஸ் எப்போதும் இல்லாத அளவில் 415 தொகுதிகளில் வெற்றிபெற்றது. நம் கட்சி நாடு முழுவதிலும் வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றது. ஆனால் இந்த்த் தீவிரமான பின்னடைவு நாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்த இருமுனைச் செயல்திட்டத்தை முன்னெப்போதையும் விட்த் தீவிரமாகவும் உறுதியுடனும் செயல்படுத்துவதற்கு தூண்டுகோலாக இருந்தது. 15 ஆண்டுகளுக்குள் – 1984இலிருந்து 1999க்குள் – ஒரு கட்சி அரசியலை இரு கட்சி அரசியலாக நாம் மாற்றினோம்.
டாக்டர் மன்மோகன் சிங்கின் யுபிஏ அரசு தன்னுடைய கூட்டணிக் கட்சிகளைச் சமாளிப்பதில்கூட்த் தவறிவிட்டது. அரசியல் ரீதியாகக் கூட்டாளி இல்லையென்றாலும் கூட யுபிஏ II ஒரு துணையைக் கொண்டிருக்கிறது. இந்தச் சிக்கலான கூட்டணிக் கட்சியினரை சமாளிப்பதில் அந்தக் கூட்டாளியின் துணை மதிப்பிட முடியாதது. இந்தத் துணையை காங்கிரஸின் நம்பகமான துணை என நான் அடிக்கடி விவரித்திருக்கிறேன். இன்று வரை காங்கிரஸ் நாடாளுமன்றத் தேர்தல்களை தவிர்த்து வந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்த கூட்டணியாளர்தான் அதற்கு காரணம் – அதுதான் மத்தியப் புலனாய்வுத் துறை என்னும் சி.பி.ஐ.!
நன்றி ; எல்.கே.அத்வானி
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.