ஜாக் கொடியினை வீசி மூவர்ணக் கொடியினை கட்டிப் பறக்க விட்ட; பாஷ்யம் ஐயங்கார்

ஜாக் கொடியினை வீசி மூவர்ணக் கொடியினை கட்டிப் பறக்க விட்ட; பாஷ்யம் ஐயங்கார் இரண்டு வாரம் சிறை வாசம் அனுபவித்து விட்டு தியாகி பட்டம் சூடிக்கொண்டு திரியும் பல தியாகிகள் இன்று தியாகிகள் பட்டியலில் உள்ளனர். நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு ஒப்பற்றவரின் சாகஸ வரலாற்றினை தெரிந்துகொள்வோம் .

ஜனவரி 26 சுயராஜ்ய தினம் இந்த ஜனவரி 26 சுயராஜ்ய தினத்தினை தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வெறித்தினமாக கொண்டாடி வந்தனர். 1932ஆம் ஆண்டு ஜனவரி 26 நள்ளிரவு வேளையில் சென்னை புனித ஜார்ஜ்க் கோட்டையில் யூனியன் ஜாக் கொடி பறந்து கொண்டிருந்தது.

சிப்பாயைப் போல் காக்கி உடையணிந்த ஒரு உருவம் ராணுவப் பாதுகாப்பு மிகுந்த புனித ஜார்ஜ்க் கோட்டையில் தந்திரமாக உள்ளே நுழைந்தது. இடுப்பில் தானே தயாரித்து வைத்திருந்த மூவர்ணக் கொடி, அதில் "இன்று முதல் பாரதம் சுதந்திரம் அடைந்து விட்டது" என்ற கொட்டை எழுத்துக்கள்.

சுமார் இருநூறு அடி உயரம் கொண்ட அந்த கொடிக்கம்பின் உச்சியினை அடைந்து யூனியன் ஜாக் கொடியினை வீசி எறிந்து தான் தயாரித்த மூவர்ணக் கொடியினை கட்டிப் பறக்க விட்டு, மெல்ல மெல்ல இறங்கி மறைந்து விட்டது அவ்வுருவம்.

மறுநாள் காலை சென்னை நகரமே அல்லோலகல் பட்டது. சூரிய ஒளியில் மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறக்க, அதனைக் கண்டு ஊர்க்கார்கள் உணர்ச்சி வசத்தில் சிலிர்க்க, அனைவரும் வந்தேமாதரம்! பாரத் மாதா கீ ஜெய்! என்று முழங்க,

இதனைக் கண்டு பிரிட்டீஷார் கோபத்தில் துடிக்க, அப்பப்பா! இறுதி வரை அந்த விஷமத்தை செய்தவரை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அந்த விஷமியின் பெயர் கே. பாஷ்யம் ஐயங்கார்.

பின்னாளில் ஆர்யா என்றப் பெயரில் மிகப் பெரும் ஓவியராக வலம் வந்தவர், இன்று நாம் பார்க்கும் பாரதமாதா உருவத்திற்கு முதன்முதலில் வடிவம் கொடுத்தவர், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தமிழர்..

இந்த மாமனிதரை முகநூல் மூலமாக நினைவு கூர்வதில் நான் பெருமை அடைகிறேன்..

வரலாற்று நினைவுகளுடன் ராம்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...