தியானம் ஏன் வேண்டும்?

 ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் நெறியாகும். வாழ்க்கையில் ஒரு தெளிவான குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்வதற்கும், அவ்வாறு நிர்ணயித்துக் கொண்ட குறிக்கோளைச் சிக்கல் இல்லாமல் – இடையூறு இல்லாமல் அடைவதற்கும், தியானம் செய்ய வேண்டும். சிதறிச் சீரழியும் மனித மனதை ஒழுங்குப்படுத்தி, அதன் பேராற்றலை ஒன்று திரட்டி ஒருமுகப்படுத்தி, சரியான இலக்கு நோக்கிச் செலுத்தி, மகத்தான வெற்றி பெற தியானம் வேண்டும்.

 

மனம் வலிமை பெற
மனம் அமைதி பெற
கலங்கிய மனத்துக்கு ஆறுதல் தர
புலன்களைக் கட்டுப்படுத்த
தோல்விகளைத் தவிர்க்க,
அறுகுணங்களைச் சீரமைக்க
கவலைகளைச் சுட்டெரிக்க
தன்முனைப்பை அழித்திட
கோபத்தைத் தவிர்க்க
ஆனந்தத்தைப் பெற
இலட்சியத்தில் வெற்றி பெற
வாழ்க்கையில் முன்னேற்றமடைய
தொண்டாற்றி இன்பமுற
மனதைப்புற உலகிலிருந்து விடுதலை பெற
மனதில் உறங்கிக் கிடக்கும் சக்திகளைப் பயனுள்ளதாக்க
பாவப் பதிவுகளை அழித்து தூய்மை செய்ய,
தியானம் செய்ய வேண்டும்.

உலகத்தில் உள்ள மெய்யான இன்பத்தைஎல்லாம் நுகர்ந்து தமக்கும், பிறர்க்கும் நிலைத்த பயன் விளைவதற்குரிய நற்காரியங்கள் செய்து, உலகத்திலுள்ள குழப்பங்களும், துன்பங்களும் நீங்க, மகிழ்ச்சியும், புகழும் பெறத் தியானம் செய்ய வேண்டும்.

தியான நிலையில் பெரிய விஞ்ஞானக் கருத்து ஒரு மின்னல் போலத் தோன்றுகிறது . இந்தத் தியான முறையிலே தான், இந்நாளில் எல்லா விஞ்ஞான விநோதங்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன.

தியானம் செய்வதால், மனம் ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. செயல் வேகம் மிகுந்ததாக இருக்கும். சாமானிய மக்களால் சிந்திக்கக் கூட இயலாத அரும்பெருஞ் சாதனைகளை ஆற்றுகின்ற வல்லமை கிடைக்கத் தியானம் உதவிடுகிறது.

மறதியை விளக்க தியானம் வேண்டும். மனம் சக்தி பெற சாப்பாடு தியானம்தான். காதலிலும், குடும்ப வாழ்விலும், தொழிலும், பொது வாழ்விலும் இடிவிழுந்து நசுங்கிய உங்கள் இதயத்து வலி நீங்கத் தியானம் வேண்டும். விண்ணில் சுழலும் விசித்திர உண்மைகளை, அதிசயங்களைக் கண்டு ஞானம் பெற, நாம் ஏறிப் பறக்க தேவைப்படும் ஊர்தியே தியானம்.

சொந்த வாழ்வில் மேம்பட்ட நிலையை எய்துவதுடன், சமுதாய ரீதியிலும் உலகியல் ரீதியிலும், மனித குலத்திற்கு எத்தனையோ நன்மைகளைச் செய்து, தொண்டாற்றி இன்பமுற தியானம் உதவுகிறது.

முடிவாக நல்ல உடல் நலம், மன நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்றுப் பேரின்ப வாழ்வு வாழ தியானம் செய்ய வேண்டும்.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...