கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் வகுப்பு கலவரத்தை காரணம் காட்டி தொடர்ந்து அம்மாநில முதல்வர் நரேந்திரமோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துவந்தது. இது மோடிக்கு இது ஒரு பின்னடைவாக கருதப்பட்டது . இந்த நிலையில், மோடி அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பித்தால் அவருக்கு விசா வழங்குவோம் என்று அமெரிக்கா நேற்று அறிவித்துள்ளது .
இதுகுறித்து பேசிய அமெரிக்க துணைச்செயலாளர் ராபர்ட் பிளேக், ‘எங்கள்நாடு குஜராத்துடன் நல்லுறவை கொண்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்களின் மிக மிக முக்கியமான வர்த்தகமையங்களில் ஒன்றாக குஜராத் உள்ளது . மோடி எப்போது வேண்டுமானாலும் விசாவுக்காக விண்ணப்பிக்கலாம்.
தொடர்ந்து மோடியை புறக்கணித்துவந்த இங்கிலாந்து அரசு சமீபத்தில் மோடி மற்றும் குஜராத்துடனான உறவை புதுப்பித்துக்கொண்டது. இந்தியாவுக்கான இங்கிலாந்து உயர்ஆணையர் ஜேம்ஸ்பெவன் மோடியை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், இது வரை அவருக்கு விசா வழங்க மறுத்து வந்த அமெரிக்காவும் தற்போது அவருக்கு விசாவழங்க முன் வந்துள்ளதால், பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவருவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.