வங்கப்பிரிவினையும் வந்தேமாதரம்! பாரத்மாதா கி ஜெய்! என்ற முழக்கமும்

வங்கப்பிரிவினையும் வந்தேமாதரம்! பாரத்மாதா கி ஜெய்! என்ற முழக்கமும் ஒன்றுபட்ட வங்காளம் ஒரு மகத்தான சக்தி, பிளவுபட்ட வங்காளம் பல பிரிவுகளாக பிரிந்து ஒவ்வொரு பிரிவும் வங்காளத்தை மூலைக்கொன்றாக இழுத்து செல்ல முனையும். ஒன்றுபட்டு ஒரே சக்தியாக விளங்கும் வங்கமக்கள் நமக்கு பலமான எதிரிகளாக விளங்கு கின்றனர்.  அவர்களைப் பிரித்து பலவீனப் படுத்துவதே எனது முக்கிய நோக்கம் என்று கூறி 1905 ஆம் ஆண்டு இந்திய வைசிராயாக நியமிக்கப்பட்ட கர்ஸான் வயலி வங்காளத்தை இரண்டாகப் பிரித்தான்,

வங்காளம் என்பது அன்று மிகப்பெரிய மாநிலம், அதாவது அன்றைய பெங்கால் பிரசிடன்ஸி என்பது இன்றைய பங்களாதேஷ், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒரிசா, மற்றும் பிகாரின் சில பகுதிகள், ஆகியன சேர்ந்த ஒன்றாகும்,

இந்தக் காலகட்டங்களில் சகோதரி நிவேதிதா, ராமகிருஷ்ண மிஷன் இல் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குதித்தாள். வங்க மக்களிடம் சென்று, சகோதர சகோதரிகளே பிரிட்டிஷ்காரர்களை கண்டால், “வந்தேமாதரம்! பாரத்மாதா கி ஜெய்,! “என்று உரக்கக் கோஷமிடுங்கள் இந்தக் கோஷத்திற்கு அவர்கள் நிச்சயம் கதிகலங்கி போய் விடுவார்கள் என்று கூறினாள்,

பங்கிம் சந்திர சாட்டர்ஜி அருளிய வந்தேமாதரம் இந்த  சகோதரி நிவேதிதா வங்கப் பிரிவினை நடந்த காலகட்டங்களில் ஒரு மாபெரும் போர்ப் பரணி கீதமாக மாறியது,

பின்னர் சகோதரி நிவேதிதா நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டாள், பரோடாவில் பேராசிரியராக பணி புரிந்து வந்த அரவிந்தரை சந்தித்து ” அரவிந்தரே இன்றையதினம் பரோடாவில் உங்களுக்கு என்ன வேலை? நீங்கள் உடனடியாக வங்காளத்திற்கு செல்லுங்கள், என உத்தரவிட்டாள்,

அரவிந்தர் மறுப்பேதும் பேசாமல் தனது வேலையினை ராஜினாமா செய்துவிட்டு வங்காளத்திற்கு சென்று சுதந்திர போராட்டத்தில் குதித்தார்,

விபின் சந்திர பாலை சந்தித்து ” நீங்கள் உடனடியாக வந்தேமாதரம் எனும் பெயரில் பத்திரிகை ஒன்றினை நடத்தவேண்டும் என கேட்டுக் கொண்டாள்,

அவரும் அதற்கு உகந்து வந்தேமாதரம் என்னும் பத்திரிகையை அரவிந்தர் உதவியுடன் நடத்த முன் வந்தார்,

வந்தேமாதரம் பத்திரிகையில் தினசரி வரும் கட்டுரைகள் மக்கள் மத்தியில் தீப்பிழம்பாக கொதித்தது, மக்கள் எங்கு பார்த்தாலும் வந்தேமாதரம்! வந்தேமாதரம்! பாரத்மாதா கி ஜெய், என்று முழக்கமிட்டார்கள்,

இவ்வாறு வந்தேமாதரம் எனும் தாரக மந்திரம் வங்கப்பிரிவினையின் போது நாடெங்கிலும் , நாடு முழுக்க ஒரு மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது,

நன்றி ; ராம் குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...