ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம் – பிரதமர் குடியரசு தலைவர் மரியாதை

ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 106-வது நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதரமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று மரியாதை செலுத்தினர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தின் 106-வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விடுத்துள்ள செய்தியில், “ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தில் தங்கள் உயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்த சம்பவம் நம்முடைய சுதந்திரப் போராட்டத்துக்கு மேலும் வலு சேர்த்தது. இந்திய மக்கள் அவர்களுக்கு எப்போதும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்” என கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், “ஜாலியன் வாலாபாக் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். இது நமது இந்திய வரலாற்றின் கருப்பு அத்தியாயம். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இது திருப்புமுனையை ஏற்படுத்தியது. வீர மரணம் அடைந்தவர்களின் வெல்ல முடியாத உணர்வை வரும் தலைமுறையினர் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்” என கூறியுள்ளார்.

இதுபோல மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்களும் மரியாதை செலுத்தி உள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; தே.ஜ., ...

''தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் ப ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை பார்வைக்கு அப்பால் இருக்கும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : இன்று மோடி வழங்குகிறார் பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் : 5 ஆண்டுகளில் இது முதல்முறை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா செல்ல உள்ளதாக ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வ ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வதந்தி ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத், சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்ட ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்டினார் பெருந்தகை என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...