காஷ்மீரில் இந்திய எல்லையை தாண்டி இந்திய ராணுவ வீரர்களை கொடூரமான முறையில் கொன்ற சம்பவத்திற்கு நாடுமுழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் , பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி தர வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி நிற்கிறது.
கடந்த 8ஆம் தேதி ரோந்து பணியில் இருந்த இந்திய ராணுவத்தினரின் மீது பாகிஸ்தான் இராணுவம் அத்து மீறி தாக்குதல் நடத்தியது. இதில் இராணுவ வீரர்கள் ஹேமராஜ், சுதாகர்சிங் ஆகியோர் கொடூரமாக கொல்லப்பட்டனர். அவர்கள் தலையை தனியாக வெட்டியுள்ளனர்.
பாகிஸ்தான் இராணுவத்தின் இந்த அத்து மீறலை கண்டித்து நாடுமுழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இராணுவ வீரர்களுக்கு அஞ்சலிசெலுத்தும் விதமாக அனைவரும் கைகளில் மெழுகு வர்த்தி ஏந்தி நின்றனர்.
இந்நிலையில் இராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட சம்பவத்தை் கண்டித்து பாஜக இன்று நாடுமுழுவதும் போராட்டம் நடத்துகிறது. இந்தியர்கள் எந்த அளவுக்கு கோபமாக உள்ளார்கள் என்பதைக் உணர்த்தவே தாங்கள் இன்று போராட்டம் நடத்துவதாக பா.ஜ.க கூறியுள்ளது. மாவட்ட அளவில் பாஜக இந்த போராட்டத்தை நடத்துகிறது.
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.