நடைமிகப் பயின்று நலம்பேணும் நல்வாய்பே
பெட்ரோல் விலை ஏற்றம்.
வாழ்விலே இல்லாத ஏற்றங்கள் அடிக்கடி
விலையிலே நிகழ்தல் சாபம்.
வாக்களித்த எந்திரம் வாழ்வுக்கு வழியின்றி
வாய்க்கரிசிக் கேங்கும் அவலம்.
வான்தொட்டு விலைவாசி விளையாடிச் சிரித்தாலும்
வாயுயரம் வாராது ஊதியம்.
நரசிம்மராவ் காலத்தில் சங்கநாதம் முழங்கிட்ட
நல்லவரா இன்றைய சிங்கனார்?
மனம்போன திக்கில் போகிறவர் பெயர்
மனமோகனச் சிங்கனார் பார்.
சிங்கனார் தில்லியில் சுகமாய்க் கொலுவிருக்க
சிக்கித் தவிப்பதோ நாம்.
சிங்கனார்க்கு யாமளித்த வாய்புகள் எல்லாமே
விழலுக்கு இறைத்த நீர்.
ஏழரை ஆண்டுகளாய்ப் பீடித்த சிங்கரசு
போவதே நாட்டுக்கு நலம்.
ஆள்வதற் காளில்லை ஆட்சியோ நன்றில்லை
ஆக்கமோ கெட்டது காண்.
சோனியா சொல்லியே ஆக்கங்கள் கெட்டனவாம்
சோடை போனதோ நம்நாடு!
இங்கிலாந்து வழியாக இடதுகால் வைத்தசனி
இத்’தாலி’ போயும் படுத்தும்!
பார்வதேயன்
நன்றி ; அருண் பிரபு
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.