2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் நாளில் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றத்தையும் அதனுள்ளிருந்தவர்களையும் பாதுகாக்கும் பணியில் நாடாளுமன்றம் மற்றும் காவல்துறையில் பணிபுரிந்த பல்வேறு பாதுகாப்புப் படையினர் தம் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். நாடாளுமன்றத்தின் மீதான
தாக்குதல் பற்றிய வேதனை நிறைந்த எதிர்வினையானது நாடெங்கும் ஒரே குரலாய் ஒலித்தது. தாக்குதல் நடத்த இந்தியா ஒரு 'சுலபமான இலக்கு' என்கிற எண்ணம் யாருக்குமே வந்துவிடாமல் நடந்து கொள்ள வேண்டும் என்ற உறுதியை வெளிப்படுத்தியதுடன், தாக்குதலுக்குக் காரணமானவர்களை எப்படியாவது கண்டுபிடித்துத் தண்டனையளிக்க வேண்டும் என்றும் உறுதி பூண்டோம். வீரமிக்க நமது பாதுகாப்புப் படையினர் அனைத்துத் தீவிரவாதிகளையும் தாக்குதல் நடைபெற்ற இடத்திலேயே அடக்கி விட்டனர். தாக்குதலுக்குத் திட்டமிட்ட மற்ற சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டபின் அவர்களில் சிலருக்குத் தண்டனையும் வழங்கப்பட்டது. மிகச் சரியான நேரத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக, எந்தத் தீவிரவாதியாலும் நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழைய முடியவில்லை. இந்திய அரசியலின் ஆணி வேரையே அசைக்கும் நோக்கத்துடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகளின் திட்டம் முழுவதுமாக முறியடிக்கப்பட்டது.
நம் நாடு எண்ணற்ற தீவிரவாதத் தாக்குதல்களைச் சந்தித்திருக்கிறது. அவற்றில் பெரும்பாலான தாக்குதல்களுக்கான திட்டங்கள் எல்லைக்கு அப்பால் திட்டமிடப்பட்டு நம் நாட்டிற்குள் செயல்படுத்தப்பட்டவை. சில தாக்குதல்களுக்கான இலக்குகள் மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்கப் பட்டன: இந்திய நாடாளுமன்றம், ஜம்மு காஷ்மீர் மாநிலச் சட்டசபை, அக்ஷர்தாம் கோயில் மற்றும் மும்பை மாநகர் மீதான தாக்குதல் ஆகியவை அவற்றில் அடங்கும். இந்த இலக்குகள் நம் நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகம், இறையாண்மை, பாரம்பரியப் பண்பாடு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் சின்னங்களாகும். இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடைபெற்ற தாக்குதலானது இந்திய நாட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதற்குச் சமமான ஒன்றாகும். எனவேதான், அத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்து நாடெங்கிலும் ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்திய நாடு, சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் மக்கள் நிறைந்த ஒரு சமுதாயமாகும். நம் காவல்துறையினர் மேற்கொள்ளும் விசாரணைகள் நீதிமன்றங்களின் கடும் சோதனைக்குள்ளாகின்றன. பலநாள் நீடிக்கும் வழக்கு விசாரணைக்குப் பிறகு, முதலில் உயர்நீதிமன்றத்திலும், கடைசியாக உச்சநீதிமன்றத்திலும் செய்யப்படும் மேல்முறையீடுகளினால் சாட்சி மிகச் சரியாக ஆராயப்பட்டு நீதி வழங்கப்படுகிறது. அஃப்ஸல் குருவைப் பொறுத்தவரை, அவனது குற்றமம் அனைத்து நீதிமன்றங்களிலும் நிரூபிக்கப்பட்டு, அவனுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையும் ஊர்ஜிதம் செய்யப்பட்டு விட்டது. மன்னிப்பு கோரும் அஃப்ஸல் குருவின் கருணை மனு, குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு விட்டது. ஏன் தாமாதமாயிற்று என்று அரசால் விளக்கைச் சொல்ல முடியாத சில காரணங்களினால் அஃப்ஸல் குருவைத் தூக்கிலிடுவது இன்றுவரை நடைபெறவில்லை; ஆனால், இறுதியாக, சட்டம் தன் கடமையைச் செய்ய ஆரம்பித்து விட்டது. மக்களின் ஏகமனதான கருத்தானது தன் கடமையைச் செய்து நீதியை நிலைநாட்டும்படி அரசை நிர்ப்பந்தித்து விட்டது. டிசம்பர் 13, 2001 அன்று செய்தது போலவே, இன்றும் நாட்டு மக்களனைவரும் ஒரே குரலில் உலகிற்குத் தெரிவிக்க வேண்டிய தெளிவான செய்தி என்னவெனில் 'இந்தியா ஒரு மென்மையான அரசு அல்ல' என்றும், நம் நாடு, அதன் இறையாண்மை மற்றும் முக்கிய அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோர் யாராக இருந்தாலும் நாம் சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதுதான். சற்று தாமதமானாலும், இறுதியாக தர்மம் வென்று விட்டது; நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது.
நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.