ஜம்முகாஷ்மீர் மாநிலம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிபபு காஷ்மீரிலிருந்து தீவிரவாத தாக்குதலுக்குபயந்து மக்களும் மற்றும் பண்டிட்டுகளும் வெளிமாநிலங்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஜம்மு காஷ்மீர் சட்ட சபை தேர்தலில் போட்டியிடவேண்டும் என பா.ஜ. க., வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் நடந்துவரும் பா.ஜ.க தேசிய கவுன்சில் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:-
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் சட்ட சபைக்கு 111 தொகுதிகள் இருக்கின்றன . ஆனால் 87 இடங்களுக்கு மட்டுமே அங்கு தேர்தல் நடந்துவருகிறது. மீதம் இருக்கும் 24 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுவதில்லை.
ஜம்முகாஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்களும், பண்டிட்டுகளும், மீண்டும் தங்கள் இடங்களுக்கு திரும்பிவந்து, தேர்தலில் வேட்பாளர்களாக நிற்க சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என நான் நினைக்கிறேன்.
காஷ்மீரில் தேர்ந் தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத் தலைவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றது வருத்தம் தருகிறது . தீவிரவாதிகள், இந்திய ஜனநாயகத்தை பஞ்சாயத்து மட்டத்திலும் நசுக்கிவருகின்றனர் என்பதை வன்மையாக கண்டிக்கிறோம். காஷ்மீர் அரசு பஞ்சாயத்துகளுக்கு நிதிவழங்குவதில் தாமதம் காட்டுவது மட்டுமின்றி, கிராமபஞ்சாயத்து தலைவர்களுக்கு (சர்பாஞ்ச்) பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறிவிட்டது.
பாகிஸ்தானி லிருந்து இந்துக்கள் விரட்ட படுவதற்கும், வங்கதேசத்திலிருந்து முஸ்லிம்கள் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைவதற்கும் இருக்கும் வித்தியாசத்திற்கு விளக்கம் தர வேண்டும். கொடுமை படுத்தப்பட்டு இந்தியாவிற்கு வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று அவர் பேசினார்.
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.