மத்தியில் ஐமு கூட்டணி ஆட்சியின் காமன்வெல்த், ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, ஆயுதபேரம், விமான ஊழல் வரிசையில் புதிதாக விவசாய ஊழல் சேர்ந்துள்ளது . விவசாய கடனை தள்ளுபடி செய்ததில் தகுதி இல்லாத நபர்களின் கடன் தொகைகளை தள்ளுபடிசெய்து ரூ. 10 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய கணக்காயம் பார்லியில் தாக்கல்செய்த தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2008 ல் 52 ஆயிரம் கோடி அளவுக்கு கடனை தள்ளுபடிசெய்ய மத்தியஅரசு அறிவித்திருந்தது. இது குறித்து ஆய்வுசெய்த தணிக்கை துறை தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஏறக்குறைய வங்கிகணக்கில் மொத்தம் 90000த்தில் 20000 ஆயிரம் பேரின் கணக்கில் முறைகேடு நடந்துள்ளது . மத்திய அரசின் கடன்தள்ளுபடி திட்டத்தின் படி 8 சதவீத விவசாயிகள் தகுதி இல்லாதவர்கள்.
இவர்கள் கடன்தள்ளுபடி செய்யப்பட்டதால் 20கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2800 கணக்குகள் வங்கிஅதிகாரிகளால் திருத்தி எழுதப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளது.
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.