புலனின்ப நாட்டம் குறையும்அளவிற்கு மனிதனின் வாழ்க்கை தரம் உயர்கிறது என்பதை நாம் அன்றாட வாழ்வில் காண்கிறோம். ஒருநாய் உண்ணும் போது கவனியுங்கள், அது உணவில் மகிழ்ச்சியடைவது போல் எந்த மனிதனும் அடைவதில்லை. இன்பத் தோடும் இடையிடையே
உறுமிக் கொண்டு தின்னும் பன்றியை பாருங்கள். அவ்வளவு திருப்தியோடு உண்கிற எந்தமனிதனும் இவ்வுலகில் பிறக்கவில்லை. தாழ்ந்த நிலையிலுள்ள மிருகங்களுடைய கேட்கும்_ஆற்றலையும், காணும்_ஆற்றலையும் நினைத்து பாருங்கள். அவற்றின் புலன் ஆற்றல்கள் மிகச்சிறப்பாக வளர்ந்துள்ளன. அவற்றின் புலனின்பம் வரம்புகடந்தது. இன்பத்தினாலும் மகிழ்ச்சியினாலும் அவை பித்தேறியவை ஆகிவிடுகின்றன.
மனிதன் தாழ்ந்தநிலையில் இருக்கும் அளவிற்கு புலனினப்த்தில் இன்பம் காண்கிறான். மேலே உயர உயர, பகுத்தறிவும் அன்பும் அவனது வாழ்க்கையின் குறிக் கோளாகின்றன. இவற்றின் வளர்ச்சிக்கு ஏற்ப அவனது புலனின்பநாட்டம் குறைகிறது.
இதை ஓர்உதாரணம் கூறி விளக்குகிறேன். ஒருவனுக்கு குறிப்பிட்ட அளவு சக்தி கொடுக்க பட்டுள்ளது என்று வைத்து கொள்வோம். அதை அவன் உடல், உள்ளம், ஆன்மா, இவற்றிக்க்காக செலவுசெய்யலாம். இவற்றுள் எதாவது ஒன்றுக்கு எவ்வளவு சக்தியை செலவிடுவானோ, அந்த அளவுக்கு குறைவாக மற்றவற்றிற்குச் செலவிட வேண்டி வரும். அப்படிதானே! அறிவற்ற காட்டுமிராண்டி மக்களுக்கு நாகரிக மக்களை விடப் புலனின்ப நாட்டத்திற்கான ஆற்றல்கள் மிகநுட்பமானவை. ஒருசமுதாயம் நாகரிகம் அடைய அடைய அதன் மக்களுடையே நரம்புஅமைப்புகள் நுட்பமாகின்றன. அதேவேளையில் அவர்கள் உடல் ரீதியாக பலவீனம் அடைகிறர்ர்கள் என்பதை வரலாற்றிலிருந்தே நாம் அறிகிறோம்.
ஒருகாட்டுமிராண்டி இனத்திற்கு நாகரிகம் அளித்துப்பாருங்கள், அப்போது இந்த உண்மையை காண்பீர்கள். இன்னொரு காட்ட்மிரண்டி இனம்தோன்றி, நாகரிகம்பெற்ற இந்த இனத்தை வெற்றிக் கொண்டுவிடும். காட்டிமிரண்டிகளே ஏறக்குறைய எப்போதும் வெற்றிபெறுகிறார்கள்.
எனவே எந்நேரமும் புலனின்பதையே நாடினால் நாம் மிருக நிலைக்கு இழிந்து விடுவோம். புலனின்பங்களை இன்னும் அதிகமாக, இன்னும்தீவிரமாக அனுபவிக்கத்தக்க ஓரிடத்திற்கு போக வேண்டும் என்று ஒருவன் கேட்கும் போது, தான் உண்மையில் என்னகேட்கிறோம் என்பது புரியாமல் அவன் கேட்கிறான். மிருகநிலைக்கு சென்றால்தான் அதைப் பெறமுடியும் என்பதை அவன் உணர்வதில்லை. தான் அசுத்தமான பொருளை உண்பதாக ஒரு போதும் பன்றி நினைப்பதில்லை. பன்றிக்கு அது தான் சொர்க்கம். மிகப் பெரிய தேவதை வந்தால்கூட பன்றி ஏறெடுத்தும் பார்க்காது. அதன் வாழ்க்கையே உண்பதில் தான் உள்ளது.
புலனின்பம் நிறைந்த ஒருசொர்க்கத்தை விரும்பும் மனிதனின் நிலையும் இத்தகையதே. அவர்கள் பன்றிகள்போல் சிற்றின்ப சேற்றில் புரண்டுகொண்டு அதற்கு அப்பால் எதையும் பார்க்கமுடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு வேண்டுவ தெல்லாம் புலனின்பம் தான். அதை இழந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்தையே இழந்தது போல்தான்.
பக்தன் என்ற வார்த்தை உண்மையில் எதைச் சுட்டிநிற்கிறதோ, அத்தகைய மேலான பக்தர்கள ஆகா இவர்களால் ஒருபோதும் முடியாது. இவர்களால் ஆண்டவனிடம் ஒரு போதும் உண்மையான அன்புவைக்க முடியாது. ஆனால் சிறிதுகாலம் இந்தக் கீழான லட்சியத்தை பின்பற்றி வரும் போது நாளடைவில் மாற்றம் ஏற்படவே செய்யும். தனக்குதெரியாத உயர்ந்த ஒன்று உள்ளது என்பதை ஒவ்வொருவனும் உணர்வேசெய்வான். வாழ்க்கையின் மீதும், புலனினப பொருட்களின்மீதும் அவனுக்குள்ள பற்று படிப்படியாக மறையும்.
தொடரும் —சுவாமி விவேகானந்தர் ……
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.