புகுந்து புறப்படும் இந்தியா.

#G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள நம் பாரதப் பிரதமர் ஜெர்மன் சென்று இருக்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் நடந்துக் கொண்டு இருந்தது வேறு விஷயம்.

நம் பிரதமரை பல நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சமயத்தில் இந்தியா அடுத்த ஆண்டு நம் நாட்டில் வைத்து #G20 நடக்கும் இடத்தை ஊர்ஜிதம் செய்து அறிவித்து அதிர்ச்சி அளித்து இருக்கிறது.

இருக்காதா பின்னே……உலக நாடுகளின் சக்தி வாய்ந்த தலைவர் ஒன்றாக கலந்து கொள்ளும் இந்த மாநாட்டை இந்தியாவின் காஷ்மீரில் ஏற்பாடு செய்து இருப்பதாக சொல்லி நம்மவர்கள் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.
அதுவும் இல்லாமல் இந்த மாநாடு வேறு ஒரு கோணத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உக்ரைன் ரஷ்யா மோதலுக்கு பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை எந்த ஒரு சர்வதேச அரங்கிலும் பார்க்க முடிவதில்லை…, காரணம் அந்நாட்டின் மீதான தடையும் ஒரு காரணம். அதுவும் நேரிடையான தடை இல்லை…… கொஞ்சம் சுத்தி வளைத்து ரஷ்ய விமானங்களுக்கு சர்வதேச அளவில் தடை எனும் விதத்தில் மேற்கு உலக நாடுகள் பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில் அடுத்த ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் #G20 உச்சி மாநாடு கூட்டப் போவதாக அறித்தது இந்தியா.

வெகு நிச்சயமாக இந்தக் கூட்டத்தில் விளாடிமிர் புடின் கலந்து கொள்வார் என பல உலக நாடுகளின் தலைவர்களும் அச்சத்தோடே அவதானிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ரஷ்ய படைகள் பாதுகாக்கும் கஜகஸ்தானில் நம் இந்திய ராணுவத்தினருக்கும் விமான படை தளம் இயங்கி வருவதால் ரஷ்ய அதிபர் வர எந்த ஒரு தடையும் இருக்கப்போவதில்லை.

இதனையே காரணங்காட்டி மற்ற நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வதை தவிர்க்க முடியாத சூழ்நிலையும் நிலவுகிறது.

ஜப்பானில் நடந்த குவாட் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டு கூட்டத்திற்கு பின்னர் தற்போது தான் G7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பல உலக நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. பலரும் ரஷ்ய அதிபரை அங்கு வைத்து பகடி செய்துக் கொண்டு இருக்க சீனாவோ கன கச்சிதமாக சதுரங்க காய் நகர்த்தலை செய்து பார்த்தது தான் சுவாரஸ்யமான தகவலாக பார்க்கப் படுகிறது.

விஷயம் இதுதான். ரஷ்யா மீதான பொருளாதாரதடை காரணமாக ரஷ்ய விமான துறைக்கு பல சிக்கல்கள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டு இருக்கிறது.

ரஷ்யா தனது போர் விமானங்களை கடந்த காலத்தில் பல நாடுகளில் விற்பனை செய்து இருக்கிறார்கள். இன்றளவும் அங்கெல்லாம் அவை பயன்பாட்டில் இருந்து. தொடர்ச்சியான பராமரிப்பு பணிகளின் போது அவற்றின் சில குறிப்பிட்ட உதிரி பாகங்கள் புதிதாக மாற்றிக் கொண்டு இருக்க வேண்டி இருக்கிறது.

அதேபோல் ரஷ்யாவில் இயங்கும் சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் விமான சேவைகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தயாரிப்பு விமானங்களையே பெரும் அளவில் பயன் படுத்திக்கொண்டு இருக்கிறது.
அவற்றுக்கும் இதே போன்ற உதிரி பாகங்கள் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

ரஷ்யா மீதான பொருளாதார தடை காரணமாக இவ்விரண்டும் பாதிப்படைந்த நிலையில்… ரஷ்யா தனது உள்நாட்டு போக்குவரத்து விமானங்களுக்கான உதிரி பாகங்களை மாற்றீடு செய்ய இரண்டே இரண்டு நாடுகளிடம் மட்டுமே உதவும் படி கேட்டுக் கொண்டது. அது சீனா மற்றும் இந்தியா. உடனடியாகவே இந்த இரண்டு நாடுகளுக்கும் மறுத்து விட்டதாக சர்வதேச அளவில் செய்தி நிறுவனம் ஒன்றின் வாயிலாக ரஷ்யா அறிவித்து அதனை ஊர்ஜிதம் செய்து இருந்தது.

இந்த நிலையில் தான் சீனாவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் ரஷ்யாவில் உள்ள அமெரிக்க போயிங் நிறுவனம் மற்றும் ஐரோப்பிய ஏர்பஸ் பயணிகள் விமானங்களுக்கான உதிரி பாகங்களை தாம் ஏற்பாடு செய்து தர இருப்பதாக புள்ளி வைத்து பேசிய தகவல் கசிந்தது. பலரும் இந்த தகவலை சற்றே புருவம் உயர்த்தி பார்க்க ஆரம்பித்தனர்.

இது நடந்த….. அதாவது தகவல் வெளியான சில மணித்துளிகளில் அவை நீக்கப்பட்டும் விட்டது.

💢ஏன்..,….?!??

இந்த இடத்தில் தான் சீனா சில வில்லங்கமான வேலை பார்த்து இருக்கிறது.

அவை தற்போது பொது வெளியில் பேசும் பொருளாக… தமாஷாக மாறியிருக்கிறது.

அதற்கு மிக முக்கியமான இன்றைய காரணம் மலேஷியா. மலேஷியா தனது போர் விமானங்களுக்கு பெரும்பாலும் ரஷ்யாவையே எதிர் பார்த்து நிற்கிறது. தற்போதைக்கு அவர்களிடம் ரஷ்ய தயாரிப்பு மிக்கியோன் நிறுவன மிக் ரக போர் விமானங்கள் இருக்கிறது. இவையெல்லாம் 1980-90 வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட விமான ரகங்கள்.

ஆச்சா…….இவற்றுக்கான உதிரி பாகங்கள் ரஷ்யா மீதான பொருளாதார தடை காரணமாக கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. போதாக்குறைக்கு
இவர்களுக்கு தற்போதைக்கு அதி நவீன நான்காம் தலைமுறை போர் விமானங்களும் தேவைப்படுகிறது. இந்த இடத்தில் சீனா கஜகர்ணமே போட்டுப் பார்த்து விட்டது தங்களை மலிவு விலை விமானங்கள் இவர்களுக்கு விற்பனை செய்து விட…., ஒன்றும் பெயரவில்லை.

மலேஷியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதால் தனது அடிப்பொடி பாகிஸ்தான் மூலமாகவும் தூது அனுப்பி பார்த்தார்கள்…… தூ தூ என துப்பாத குறை தான் அங்கும்.

அவர்களுக்கு இந்திய தயாரிப்பு இலகு ரக தேஜாஸ் மீது தான் அளப்பரிய மோகம். தவிர விலையும் குறைவு….. செயல் திறன் மிக்கது என்கிற எண்ணமும் அதற்கு உண்டு.
இந்த இடத்தில் இடைச்செருகலாக கடந்த காலத்தில் ரஷ்ய தயாரிப்பு அதி நவீன ஐந்தாவது தலைமுறை ஒற்றை இஞ்சின் செக்மேட்டை விற்பனை செய்ய திட்டமிட்டு காய் நகர்த்தினார்கள். அதற்கு மலேஷியாவும் ஆரம்பத்தில் சபலப்பட்டது.

ஆனால்……
இன்றைய தேதியில்…,
இன்று உள்ள உலக அரசியல் சூழ்நிலையில் இவை சாத்தியம் இல்லை என்பது ஊர்ஜிதமாக தெரிந்து விட்டது.

இந்த இடத்தில் தான் நம்மவர்கள் அட்டகாசமான வேலை பார்த்து இருக்கிறார்கள். ரஷ்ய நிறுவனம் மிக்கியானிடமிருந்து கடந்த காலத்தில் பெற்ற லைஸ்சன்ஸ் மூலமாக இந்தியா தாமாகவே சொந்தமாக உதிரி பாகங்கள் உற்பத்தி செய்ய முடியும். அவற்றை மலேஷியா போன்ற நாடுகளில் பயன்பாட்டில் உள்ள விமானங்களுக்காக பொருத்தவும் முடியும்…. அது போலவே மற்ற நாடுகளில் இயங்கும் ரஷ்ய மிக் ரக விமானங்களுக்கான உதிரி பாகங்களை நீண்ட கால நோக்கில் பொருந்தி தர முடியும்.

இவையெல்லாம் போக அந்த நாடுகளில் இயங்காமல் தரையில் நிற்கும் விமானங்களின் உதிரி பாகங்களை கழற்றி மற்ற விமானங்களுக்கு மாற்றீடு செய்ய நம்மவர்களால் முடியும் என்கிறார்கள். காரணம் அனுபவம்.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் இந்தியா தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கும் ஐந்தாவது தலைமுறை விமானங்களில் வேலை பார்க்க இதுபோன்ற திருத்தம் செய்யும் பணிமணைகளில் பணியில் இருப்பவர்களிடம் வேலை கற்றுக் கொள்ள….. பயிற்சி பெற.,….. புதிதாக பல இடங்களில் பயிற்சி பட்டறைகளை உருவாக்க முடியும். இதன் மூலம் இந்திய வரும் நாட்களில் விமானப் பொறியியல் பிரிவு பண்மடங்கு அதி வேக வளர்ச்சி காணும் என்றெல்லாம் மதிப்பீடு செய்து பல உலக நாடுகளின் வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறார்கள்.

இவையெல்லாமுமே அக்னி பாத் திட்டத்தின் ஒரு அங்கமாக இருக்குமோ என அவர்கள் அச்சம் கொண்டு ஆடிப்போய் இருக்கிறார்கள்.

இன்னமும் சரியாக சொன்னால்……… ரஷ்ய போர் விமானங்களை பயன் படுத்தும் உலக நாடுகள் பலவற்றில் உடனடியாக…,. நேரிடையாக நான்காவது தலைமுறை அல்லது ஐந்தாவது தலைமுறை விமானங்களுக்கு போக தடையாக இருப்பது அவற்றின் விலை மாத்திரம் அல்ல….. தங்கள் வசம் உள்ள போர் விமானங்களை என்ன செய்வது என்கிற அவர்களுக்கு இ ஆழமான சிந்தனையும் கூட தான்.

இந்தியாவிற்கு கடந்த காலத்தில் ரஷ்ய விமானங்களை தாங்களே சொந்தமாக திருத்திக் கொள்ள லைஸ்சன்ஸ் முதற்கொண்டு முன்னனுபவமும் இருக்கிறது.எந்த அளவில் என்றால்…….. ரஷ்யா தனது போர் விமானங்களுக்கு மேம்படுத்தலை செய்து கொடுக்க இந்தியாவின் உதவியை கோரும் அளவிற்கு நம்மவர்கள் இதில் புகுந்து விளையாடி வருகின்றார்கள்.

அப்படி மற்ற நாடுகளில் உள்ள ரஷ்ய விற்பனை செய்து போர் விமானங்களுக்கு மேம்படுத்தலை செய்து கொடுக்க…., அவர்கள் தற்போது இந்தியாவை நாட ஆரம்பித்து இருக்கிறார்கள். இன்று அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இந்தியா ……நாளை அவர்களுக்கு தங்களின் நான்காவது தலைமுறை அல்லது ஐந்தாவது தலைமுறை விமானங்களை விற்பனை செய்வது வெகு சுலபமாக இருக்கப்போகிறது என பதைபதைத்து போய் இருக்கிறது.

இதில் முதல் இடத்தில் சீனா வருகிறது.காரணம் அவர்கள் வசம் தான் பல ரஷ்ய தயாரிப்பு மாதிரி விமானங்கள் செயல்பாட்டில் இருக்கிறது. உலக நாடுகளோ அவற்றை காப்பி-காட் என முத்திரை குத்தி வைத்து இருக்கிறார்கள்.

இந்த உலகில் பலராலும் சிலாகிக்கப்படும் இந்திய தயாரிப்பு போர் விமானங்களை வாங்க பல நாடுகளில் ஆர்வம் காட்டுவதை தடுக்க சீனா செய்த தகிடுதத்தமான சமாச்சாரங்களால் உலக அளவில் இந்திய தயாரிப்பு போர் விமானங்கள் குறித்தான அவதானிப்பு தற்போது பேச்சு பொருளாக மாறியிருக்கிறது.

G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருக்கும் பிரதமர் இந்த இடத்திலும்….. ஜெர்மனியிலும் இது குறித்து அங்குள்ள பெரும் வர்த்தகர்களிடம் பேசும் வாய்ப்பு இருப்பதாக சீனா சந்தேகம் கொள்கிறது. உலகளவில் தலை சிறந்து விளங்கும் ஜெர்மன் இஞ்சினியரிங் காப்பி-காட் செய்த தகிடுதத்தமான சமாச்சாரங்களால் சீனாவை ஜெர்மானியர்கள் விரும்பவில்லை. அவர்களுக்கு இந்தியா மிக நல்லதோர் தேர்வு.
ஏற்கனவே விமான நிறுவனங்களில் பெயர் போன அமெரிக்க போயிங் நிறுவனம் மற்றும் ஐரோப்பிய ஏர்பஸ் நிறுவனங்கள் இந்தியாவோடு இணைந்து பணியாற்ற விரும்பும் இந்த தருணத்தில் நம் பாரதப் பிரதமரின் இந்த பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஒன்று மட்டும் நிச்சயம்.
மிக பிரமாண்டமாக… பிரகாசமான நம் இந்திய தேசத்தின் எதிர்காலம்.., அதற்குண்டான செயல் திட்டம் நம் கண் முன்னே நடந்து வருகிறது..,. அதற்குண்டான சமிக்ஞைகள்…. அவதானிப்புகள்….. கன கச்சிதமாக நிறைவேற்றப்பட்டு கொண்டு வருகிறது என்பதை நன்றாக தெரியும் வண்ணம் காரியங்கள் நடந்தேற ஆரம்பித்து விட்டது.

வாழ்க பாரதம்…..,
💓 ஜெய் ஹிந்த்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலக அமைதிக்காக இணைந்து செயல்பட ...

உலக அமைதிக்காக இணைந்து செயல்பட உறுதி – மோடி மற்றும் ட்ரம்ப் உரையாடல் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன், பிரதமர் மோடி போனில் ...

இந்திய இளைஞர்கள் உலக நன்மைக்கா ...

இந்திய இளைஞர்கள் உலக நன்மைக்கான சக்தி – பிரதமர் மோடி பெருமிதம் 'இந்தியாவின் இளைஞர்கள் இல்லாமல் உலகின் எதிர்காலத்தை கற்பனை செய்து ...

பிரதமர் மோடியின் நெகிழ்ச்சி சம ...

பிரதமர் மோடியின் நெகிழ்ச்சி சம்பவம் – அனைவருக்கும் எடுத்துக்காட்டு குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது ராஜ பாதையில் ...

எனக்கு இந்திய டி.என்.ஏ – இந்தோன ...

எனக்கு இந்திய டி.என்.ஏ – இந்தோனேசியா அதிபர் டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த விருந்தில், இந்தோனேசியா ...

''வேற்றுமையில் ஒற்றுமையே நம் பலம். நமக்குள் உள்ள வேற்றுமைகளை ...

ஓட்டுக்களை பெறுவதற்காக பொய் சொ ...

ஓட்டுக்களை பெறுவதற்காக பொய் சொல்லும் கட்சி ஆம் ஆத்மி – அமித்ஷா டில்லி மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக பொய் சொல்லும் கட்சி ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...