சபரிமலைக்கு அருகில்102 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர்

சபரிமலைக்கு அருகில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த விபத்தில் 102 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர்,50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மகர ஜோதியை தரிசித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியவர்கள் இந்த விபத்தில் சிக்கினர்.

விபத்தில் இறந்தவர்கள், காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இடுக்கி மாவட்டத்தில்: கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் புல்லுமலை என்ற இடத்தில் சபரிமலைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உப்புப்பாறை என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. இந்த இடம் தமிழக எல்லையை ஒட்டியது.

வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்தே தமிழ்நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். யாத்ரிகர்களை ஏற்றிக்கொண்டு குறுகலான அந்தப் பாதையில் வந்த ஒரு ஜீப் திடீரென நின்றுவிட்டதாம். அதை மீண்டும் ஸ்டார்ட் செய்தபோது நிலை தடுமாறி பக்தர்கள் கூட்டத்தில் பாய்ந்து கட்டுப்பாடு இல்லாமல் ஓடி பிறகு பள்ளத்தில் விழுந்ததாம். ஒதுங்க இடம் இல்லாமல் பக்தர்கள் இருட்டில் ஓடியதால் நெரிசல் ஏற்பட்டு அதிகம் பேர் உயிரிழக்க நேர்ந்தது என்று தெரிகிறது.

ஆம்புலன்ஸ்கள் போக முடியவில்லை: மிகவும் குறுகலான பாதை என்பதால் ஆம்புலன்ஸ்களோ வேன்களோ செல்ல முடியவில்லை. இதனால் மீட்புப் பணியை உடனே தொடங்க முடியவில்லை. 70 சடலங்கள் மீட்கப்பட்டன. விபத்து நடந்த இடத்தில் தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. செல்போன்களும் ஓலிபரப்பு கோபுரம் இல்லாததால் செயலிழந்தன.

விபத்து நடந்த இடத்துக்கு அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்தும் மருத்துவக் கல்லூரியிலிருந்தும் மீட்பு, உதவிக் குழுவினர் விரைந்தனர். கோட்டயம் மருத்துவக் குழுவினரும் உதவிக்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்கள் பீர்மேடு, கோட்டயம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு வண்டிப்பெரியாறு போலீஸôர் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் விபத்தில் சிக்கியதாக ஒரு தகவலும், பயணிகளுடன் சென்ற பஸ் விபத்தில் சிக்கியதாக மற்றொரு தகவலும் தெரிவிக்கிறது.

நெரிசலில் இறந்ததாக ஒரு வட்டாரமும், வாகனம் ஏறியதால் நசுங்கி இறந்ததாக மற்றொரு வட்டாரமும் தெரிவிக்கிறது.

சோகம் கப்பியது: பொங்கல் விழாவில் பங்கேற்க வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள்தான் பெரும்பாலும் இறந்தனர் என்று தெரிகிறது. கேரளத்திலும் தமிழகத்திலும் இந்த விபத்து குறித்த செய்தி பரவியதும் சோகம் கப்பியது.

{qtube vid:=rQL_qsFy_yg}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...