பாஜக தமிழகதலைவர் அண்ணாமலை சாமி தரிசனத்திற்காக நேற்று இரவு திருப்பதிக்கு சென்றார். பின்னர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக நடந்து மலையேறி சென்ற அவர் இரவு திருமலையில் தங்கினார். இந்நிலையில் இன்றுகாலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற அண்ணாமலை விஐபி பிரேக் தரிசனம்மூலம் சாமி கும்பிட்டார். தொடர்ந்து அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்தபிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேவஸ்தான வேதபண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
இந்நிலையில், கோவிலில் இருந்து வெளியேவந்த அண்ணாமலையை பக்தர்கள் குறிப்பாக தமிழக பக்தர்கள் சூழ்ந்துகொண்டு அவருடன் போட்டி போட்டு செல்பி எடுத்து கொண்டனர். அப்போது, கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களும் அண்ணாமலையை பார்த்து அவருடன் பேசிகைகுலுக்கி செல்பி எடுத்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, “தமிழக மக்கள் அனைவரும் சிறப்பாகவாழ அருள் புரியவேண்டும் என்று வேண்டி கொண்டேன். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிட்டதக்க எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழக பாஜக டெல்லிக்கு அனுப்பிவைக்கும்” என்றும் கூறினார்.
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |