போலி என்கவுன்டர் என்று கூறி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் அமித் ஷாவை மீண்டும் கைதுசெய்து விசாரணை நடத்த சிபிஐ மேற்க்கொண்ட முயற்சிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்து விட்டது.
அமித் ஷா, குஜராத் மாநிலத்தில் அமைச்சராக இருந்தபோது சொராப்புத்தீன் என்கவுண்டர் வழக்கின்கீழ் கைதுசெய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருக்கிறார் . அண்மையில் ராஜ்நாத்சிங் கால் அவர் பாஜக.,வின் தேசிய செயலராக நியமிக்க பட்டிருக்கிறார்.
இந்நிலையில் துல்சி ராம் பிரஜாபதி என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் அவரை மீண்டும் கைதுசெய்து விசாரணை நடத்த சி.பி.ஐ திட்டமிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமித்ஷா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சொராப்புத்தீன் வழக்கிலேயே துல்சி ராம் என்கவுண்டர் வழக்கும் ஒருபகுதி என்பதால், அமித்ஷாவை மீண்டும் கைதுசெய்ய அனுமதிக்க கூடாது. ஒரேவழக்குக்காக இரண்டு முறை அமித்ஷாவை கைது செய்யக்கூடாது என்றனர் .
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.